| மெய்யாத மெய்கடிந்து வீடாத வீடெய்தி | | வீழார் வீழச் | | செய்யாள்செய் சரக்கறையாந் திருவால வாயிலுறை | | |
எழுசீர்ச் சந்த விருத்தம் 123. | ஆறுதலை வைத்தமுடி நீணிலவே றிப்பவெமை | | ஆளுடைய பச்சை மயிலோ | | டீறுமுத லற்றமது ராபுரியி லுற்றபர | | மேசரொரு சற்று முணரார் | | நீறுபடு துட்டமதன் வேறுருவெ டுத்தலரின் | | நீள்சிலைகு னித்து வழிதேன் | | ஊறுகணை தொட்டுவெளி யேசமர்விளைப்பதுமென் | | |
கட்டளைக் கலித்துறை 124. | பல்லா ருயிர்க்குயி ராமது ரேசரப் பாண்டயன்முன் | | கல்லானைக் கிட்டகரும்பன்று காணின் களபக்கொங்கை |
விரும்பாதவர்கள் விரும்ப வென்பது வேறு பொருள். செய்யாள் செய் - திருமகளாற் செய்யப்பட்ட; செய்யாள் - செய்யாதவளென்பது வேறுபொருள். சரக்கறை - பொன்ன்றை; “சரக்கறை யோவென் றனி நெஞ்சமே”(தே.) தேவரீர் தலைவியைப் பாதுகாத்தருள வேண்டுமென்பது கருத்து. இச்செய்யுள் முரண்விளைந்தழிவணி.
123. (சந்தக் குழிப்பு.) தானதன தத்ததன தானதன தத்ததன தானதன தத்த தனனா.
தலைவி இரங்கிக் கூறல். ஆறு - கங்கை நதியை. முடி - சடைமுடி பச்சைமயில் - மரகதவல்லியாகிய அங்கயற்கணம்மை (198.) ஒரு சற்றும் - சிறிதும். துட்டமதன்: 185. அலரின் நீள் சிலை - பூவாகிய நீண்ட வில்லை; இன:்வேண்டாவழிச் சாரியை. மன்மதனுக்குப் பூவும் வில்லென்பர்; “பூங்குலைசிலையாக் கொண்டவர்” (177); இது காமநூலென்றும், காம காண்டமென்றும் கூறப்படும் (சிலப். 2 : 42 -5, குறிப்புரை.); காமனை, “புஷ்ப தந்வா’ என்பர் வடமொழியாளர்,
மதன் சமர்விளைப்பதையும் பரமேசர் சற்றும் உணரார்.
124. பாங்கி தலைவன் தந்த தழையை ஏற்றுக் கொள்ளும்படி தலைவியிடம் சொல்லுதல்.
|