அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம் 121. | போரானை முதுகுறைப்பப் பொறையாற்றுஞ்சினகரத்துப் | | புகைக்கை நால்வாய்க் | | காரானைப் போர்வைதழீஇ வெள்ளானைக் கருள்சுரந்த | | கடவு ளேயோ | | ஓரானை முனைப்போருக் கொருகணைதொட்டெய்திடுநீர் | | ஒருத்தி கொங்கை | | ஈரானை முனைப்போர்க்கும் வல்லீரேலொருகணைதொட் | | |
122. | எய்யாது நின்றொருவ னெய்வதுவு மிளையாடன் | | இளைப்பும் புந்தி | | வையாதார் வைதலுறின் மதியார்தா மதித்திடுதல் | | வழக்கே யன்றோ |
121. தலைவியை மணஞ்செய்து எய்துவீராகவென்று தோழி தலைவனை நோக்கிக் கூறியது.
போரானை - விமானத்தைச் சுமக்கும் எட்டு - யானைகள் பொறையாற்றும் - சுமக்கும். சினகரத்து - கோயிலில். ஆனைப்போர்வை முனிவர்கள் யாகத்திலுண்டாக்கி யனுப்பிய யானையின் தோலாகிய போர்வை. வெள்ளானைக்கு அருள் சுரந்தது - ஐராவத்ததிற்குத் துருவாச முனிவர் இட்ட சாபத்தைப் போக்கி யருளியது: இது வெள்ளானை சாபந்தீர்த்த திருவிளையாடலால் அறியப்படும். ஓரானை முனைப்போர்க்கு - சைனர்கள் விடுத்த யானையின் பயத்தைக் கெடுத்தற்கு. ஒருகணை - நரசிங்காத்திரம். இவ்வரலாறு யானையெய்த திருவிளையாடலால் அறியலாகும். வல்லீரேல் - வல்லமையுடையீராயின். ஒரு கணை என்றது மன்மதனுடைய பாணங்களுள் ஒன்றாகிய தாமரைமலர் போன்ற தலைவியின் கையை. எய்திடீர் - அடைவீராக.
122. பாங்கி கூறியது.
எய்யாது - பிறர் அறியாமல்; அம்பை எய்யாமலென்பது வேறு பொருள். இளையாள் - தலைவி; இளைத்தலில்லாதவளென்பது வேறு பொருள். புந்திவையாதார் - புத்தியிற் கொள்ளாத தாயர் முதலியோர்; வையாதார் - வையாதவர்களென்பது வேறு பொருள்; வைதல் - பழிமொழி கூறல் மதியார் - சந்திரனை அணிந்தவர்; மதித்தலில்லாதவரென்பது வேறுபொருள். (பி-ம்.) ‘மதியீர்தா மதித்திடுதல் வழக்கே போலும்’. மெய்யாத மெய் - மெய்யாகாத உடம்பு. வீடாத வீடு - அழியாத முத்தி. வீழார் வீழ - தம் நிலையினின்றும் இறங்கி வாராதவர்களும் விரும்ப; வீழார் - முத்திபெற்றவர்கள்;
|