பக்கம் எண் :

மதுரைக் கலம்பகம்153

கலிநிலைத்துறை
169.
ஆவா வென்னே தென்னவர் கோற்கன் றணிசாந்தம் 
நீவா நின்றாய் நின்றில காமா னலமென்னே 
கோவாம் வில்லி கொடுந்தனு வுங்கூ னிமிராதால் 
மூவா முதலார் மதுரையி தன்றோ மொழிவாயே.         
(66)


அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்
170.
மொழிக்கய லாகி வேத முடிவினின் முடிந்து நின்ற
வழிக்கய லாகார் கூடல் வலைவாணர் பெருவாழ் வன்னீர்
கழிக்கயல் விற்பீர் மற்றிக்காசினி யேழு முங்கள்
விழிக்கய லுக்கே முற்றும் விலையென்ப விளக்கிட் டீரே.
(67)

நேரிசை வெண்பா
171.
விற்கரும்பே யொன்றிதுகேண் மென்கரும்பே யன்னார்தம்
சொற்கரும்பே முற்றுமலர் தூற்றுமால் - நற்கரும்பை

    169. தன் மெய்வெப்பத்தையறிந்து திருநீற்றைப் பூசிய தோழியை நோக்கித் தலைவி கூறியது.

    தென்னவர்கோன் - கூன்பாண்டியன். ‘சாந்தம் - இங்கே திருநீறு. நீவா நின்றாய் - பூசுகின்றாய். இதனாற் காம வெப்பம் தணிந்திலது. வில்லி - மன்மதன். தனு - அவனுடைய கருப்பு வில், உடம்ப்: சிலேடை.

    திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் பூசிய திருநீற்றாற் பாண்டியனுடைய சுரநோயும் கூனும் நீங்கியதுபோல, என்னுடைய சுரமும் மன்மதனுடைய வில்லின் வளைவும் நீங்கிள; ஆதலால் இவ்வூர் மதுரையன்றோ வெனத் தலைவி மயக்கத்தாற் கூறினாள். இது, “கானவர் தாந்தினை கொய்தனரோ” என்னும் தனிப் பாடலிலுள்ள “நானவன்றானலவோ” என்னும் பகுதியை நினைப்பிக்கின்றது. மந்துரவாதிகள் சூரத்தைத் திருநீறிட்டுத் தணியச் செய்வர்.

    இங்கேயுள்ள வரலாறு பாண்டியன் சுரந்தீர்த்த படலத்தால் அறியப்படும்.

    170. மீன் விற்கும் வலைச்சியை நோக்கி அவள்பாற் காமமுற்ற ஓரிளைஞன் கூறியது இது.

    மொழிக்கு அயலாகி - சொல்லுக்குப் புறம்பாகி. வேத முடிவு - உபநிடதம். வலைவாணர் - வலைஞர். கழிக்கயல் - உப்பங்கழியிலே யுள்ள கயல்மீன்கள். விழியாகிய கயலுக்கே. உங்கள் பார்வையில் யாவரும் மயங்குவரென்பது கருத்து. தான் மயங்கியதை இளைஞன் உலகின்மேலேற்றிக் கூறினான்.

    171. பாங்கி மன்மதனது கரும்புவில்லை நோக்கிக் கூறியது.

    மென்கரும் பேய் அன்னார் - மெல்லிய கரிய பேயை யொத்த தோழிமாரும் பிறமகளிரும். சொற்கரும்பே - சொல்லாகிய கரும்புகளே. கரும்