| ஆளார் கடம்பவனத் தையருமற் றென்னீயும் | | |
கட்டளைக் கலிப்பா 172. | வால வ்ருத்த குமார னெனச்சில | | வடிவு கொண்டுநின் றாயென்று வம்பிலே | | ஞால நின்னை வியக்கு நயக்குமென் | | நடனங் கண்டும் வியவாமை யென்சொல்கேன் | | பால லோசன பாநுவி லோசன | | பற்ப லோசன பக்த சகாயமா | | கால காலத்ரி சூல கபாலவே | | |
கலிவிருத்தம் 173. | கட்டு வார்குழ லீர்கயற் கண்ணினாட் | | கிட்ட மாஞ்சொக்க ரைக்கரை யேற்றினீர் | | மட்டில் காம மடுப்படிந் தேற்கெனே | | கொட்டு வீர்பின்னுங் குங்குமச் சேற்றையே. |
பென்றது அச்சொல்லுக்கு இயல்பாக உள்ள இனிமை பற்றி. நற்கரும்பை - தலைவியை. நீயும்: உம்மை இறந்தத்து தழுவியது. வாளா - வீணே. அலர் தூற்றல் - பழி மொழியைக் கூறுதல், மலரம்பை எய்தல்; சிலேடை.
172. வால வ்ருத்த குமாரனெனச் சில வடிவுகொண்ட வரலாறு விருத்த குமார காலரான படலத்தால் உணரப்படும். வம்பிலே - வீணாக. என் நடனம் கண்டு - பிறந்து பிறந்து பலமுறை பாலனாகவும் பின் குமரனாகவும் பின் கிழவனாகவும ஆகும் என் ஆடலைக் கண்டு. காலலோசன - நெற்றிக்கண்ணை யுடையவரே, பாநு விலோசன - சூரியனாகிய கண்ணையுடையவரே. பற்ப லோசன - தாமரை போன்ற கண்ணை யுடையவரே; என்றது. குளிர்ந்துள்ள சந்திரனாகிய திருவிழியைக் குறித்தபடி. (பி-ம்.) ‘பரமலோசன’, ‘பாம லோசன’.
173. தெப்பத் திருவிழாவில் சொக்கநாதரைக் கரையில் எழுந்தருளுவித்ததக் கண்டு காமுற்ற தலைவியொருத்தி கூறியதாக அமைந்த செய்யுள் இது.
கட்டிய நீண்ட குழலையுடையீர்; என்றது சொக்கநாதரைக் கரையேற்றுகையில் உடனிருந்த உருத்திரகணிகையரை. சொக்கநாதரை மட்டும் கரையேற்றிவிட்டுக் காமமடுவில் வீழ்ந்த என்ன்கை கரையேற்றாமல், என்மேல் சேற்றைக் கொட்டுதல் உங்கள் இயல்புக்கு முரணன்றோ வென்பது குறிப்பு. குங்குமச் சேறென்றது தலைவியின் காம வெப்பம் தணிதற் பொருட்டுப் பூசிய குங்குமக் குழம்பை.
|