நேரிசை வெண்பர் 174. | குங்குமச்சே றாடுங் கொடிமாட வீதியில்வெண் | | சங்குமொய்க்குஞ் சங்கத் தமிழ்க்கூடல் - அங்கயற்கண் | | அம்மையிடங் கொண்டாரை யஞ்சலித்தே மஞ்சலமற் | | றிம்மையிடங் கொண்டார்க் கினி. |
எண்சீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம் 175. | இன்னீ ரமுதுக் கிடமுங் கடுவுக் | | கெழிலார் களனுங் களனா வருளா | | நன்னீ ரமுதக் கடலா கியுளார் | | நரியைப் பரியாக் கிநடத் தினரால் | | அந்நீர் மையின்மிக் கென்னீர் மையெனா | | அடன்மா மடன்மா வரமா றுசெயா | | மைந்நீ ரளகத் திளமா னையனீர் | | வருவேன் மதுரைத் திருவீ தியிலே. |
174. குங்குமச் சேறு ஆடும் விதி - மகளிர் ஊடற்காலத்தில் எறிந்த குங்குமக் கலவை அளைந்த வீதி; “கோதை மடவார் குலாவுமெய் யிற்றிமிர்ந்த, சீதக் களபச் செழுஞ்சேற்றால் - வீதிவாய், மானக் கரிவழுக்கும்” (நள.) சங்கத் தமிழ்க்கூடல் - தமிழ்ச் சங்கத்தையுடைய மதுரை. அங்கயற்கணம்மையை இடப்பாகத்திற் கொண்டாரை. இ மயிடம் கொண்டார்க்கு இனி அஞ்சலம் - இந்த எருமைக்கடாவை வாகனமாகக் கொண்ட யமனுக்கு இனி அஞ்சேம். மயிடம் - மஹிஷம்; 1 : 65-6. உரையைப் பார்க்க; இது திரிபு நோக்கி னையிடமென்று வந்தது. கொண்டாரென்று பன்மையாற் கூறியது இகழ்ச்சிக் குறிப்பு; “காமரை வென்ற கண்ணோன்” (திருச்சிற். 164. பேர்.) என்புழிப்போல.
175. தலைவன் மடலேறுவேனென்றல்.
இன்னீர் அமுதுக்கு இடமும் - இனிய இயல்பையுடைய அமுதம் போன்ற உமாதேவியாருக்கு இடப்பாகத்தையும். கடு - விடம். களம் - எழுத்து. களனா - இருப்பிடமாக. நன்னீர் அமுதக் கடல் - நல்ல இயல்புடைய பாற்கடல்; தம்பால் வந்தோருக்குப் பேரின்பத்தை அளித்து இறவாத நிலையைத் தருதலின் அமுதக் கடலென்றார். பாற்கடலில் விடமும் அமுதமும் தோற்றியனவென்பதை இது நினைப்பிக்கின்றது. மிக்கதென்றது மிக்கெனக் குறைந்து வந்தது; என் நீர்மை அந்நீர்மையின் மிக்கது. எனா - என்று கண்டோர் கூறும்படி. (பி-ம்.) ‘நீர்மையென’. மடல் மா அடல் மா வர மாறு செயா - பனைமடலாலாகிய குதிரையை அடல்மாவாக வரும்படி வேறுபடுத்த; மா - குதிரை. சொக்கநாதர் உயிருள்ள ஒரு விலங்கை மற்றொரு விலங்காகச் செய்தார்; யான், உயிரில்லாத பனைமடலால் ஒரு குதிரையை உயிருள்ள குதிரை போலச் செய்வேனென்பது கருத்து. வீதியில் வருவேன்.
|