பக்கம் எண் :

156குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

எழுசீர்ச் சந்தவிருத்தம்
176.
    திருவைப் புணர்பொற் புயமைப் புயலைகைத்
        திகிரிப் படையுய்த் தவர்கூடற்
    றருமொய்த் தருமைச் சிறைபெற் றனமுத்
        தமிழ்வெற் பமர்பொற் கொடிபோல்வீர்
    புருவச் சிலையிற் குழைபட் டுருவப்
        பொருகட் கணைதொட் டமராடும்
    செருவிற் றொலைவுற் றவரைக் கொலுநற்
        சிலைசித் தசர்கைச் சிலைதானே.    
(73)

கட்டளைக் கலித்துறை
177.
    சிலைசிலை யாக்கொண்ட தென்மது
        ரேசர் சிலம்பில்வில்வேள்
    மலைசிலை யாக்கொண்ட வாணுத
        லாய்நின் மருங்குல்சுற்றும்

    176. (சந்தக் குழிப்பு) தனனத் தனனத் தனனத் தனனத் தனனத் தனனத் தனதான. தலைவன் கூற்று.

    மைப்புயல் கை - திருமாலின் கையில். திகிரிப்படை உய்த்தவர் - சக்கராயுதத்தைக் கொடுத்தவரது. தருக்கள் மொய்க்கப் பெற்று அதனாற் சிறை பெற்றாற் போன்ற முத்தமிழ் வெற்பு; கூடலைச் சார்ந்த வெற்பு. மரங்கள் மலையின் சிறகுகளை ஒத்தன. குழை - காதணி. புருவமாகிய சிலையின் கண்ணாகிய கணையைத் தொடுத்து. தொலைவுற்றவரை - தோற்றவரை. (பி-ம்.) ‘தொலைவற்றவரை’. நறைசிலை யென்றது இகழ்ச்சி; ‘கற்கறித்து நன் கட்டாய்’ என்றதுபோல. சித்தசர் - காமன்; பன்மை இகழ்ச்சி பற்றி வந்தது. நின் கண்ணால் வருந்தியவரைப் பின்னும் வருத்திக் காமன் அம்பு கொல்லும்; தோல்வியுற்றவரைக் கொல்லுதல் அறமன்றாதலின் அங்ஙனம் செய்தல் பொருந்தாதென்றபடி.

    177. தலைவன் தலைவியும் தோழியும் ஒருங்கிருந்தவழித் தழையேந்தி, ‘யான் எய்த அம்போடு ஒருமான் ஈண்டுப் புக்கதோ’ என்று கேட்ட காலத்தில் தோழி தலைவியை நோக்கிக் கூறி நகையாடியது இது.

    சிலைசிலையாக் கொண்ட - மலையை வில்லாகக் கொண்ட. வேள் - மன்மதன். மலை சிலையாக் கொண்ட வாள் நுதலாய் - போர் செய்கின்ற வில்லாகக் கொண்ட ஒளி பொருந்திய புருவத்தையுடையாய்; மலைசிலை: வினைத்தொகை; நுதல் - புருவம். புருவத்திற்குக் கருப்புவில் உவமை ( சிலப்.