| இலைசிலை யாக்கொண் டிளமானை | | யெய்திடு மிங்கிவர்பூங் | | குலைசிலை யாக்கொண் டவர்போலு | | |
அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம் 178. | கொங்குரை யாற்றி லிட்டுக் குளத்தினிற் றேட நீடு | | மங்குறோய் முதுகுன் றையர் மதுரையோ மதியில் பாணா | | எங்கையர் மனைக்கண் வைத்தாங் கெம்மிடைத் தேர்தி மற்றம் | | மங்கையர் மனம்போ லன்றே மகிழ்நர்தம் வாழ்க்கை தானே. |
2 : 44-5.) நின் மருங்குல் சுற்றும் இலை - நின் இடையைச் சுற்றி உடுத்தற்குரிய தழையை. பூங்குலை சிலையாக் கொண்டவர் - பூங்கொத்தை வில்லாக்க் கொண்ட காமன் (123.) செம்மல் - தலைவன். தலைவன் வேட்டையென்று கூறுவது பொய்; வந்த நோக்கம் வேறென்று தோழி கூறினாள்.
178. பரத்தையிற் பிரிந்த தலைவனிடமிருந்து வந்து பாணனை நோக்கித் தலைவி கூறியது; தோழி கூற்றுமாம்.
கொங்குரை - பொன்னை. (பி-ம்.) ‘கொங்குலாமாற்றில்’. கொங்கு நாட்டிற் பலவிடத்துப்பொன் அகப்படுதலினாலும் அஃது மாற்றறிய உரைக்கப்படும் ஆணிப்பொன்னாதலாலும் அதனைக் கொங்குரை யென்றார். உரை - உரையாணிப்பொன்; “சிற்றம்பல முகடு, கொங்கிற் கனக மணிந்தவா தித்தன்” (திருத்தொண்டர் திருவந்தாதி, 65.) சோழர்களிற் சிலர் கொங்குநாட்டு அரசர்களை வென்று ஆந்நாட்டிலிருந்து பொன் கொணர்ந்தனரென்பது பழைய வரலாறு. சுந்தரமூர்த்தி நாயனார் ஒருமுறை சிவாஞ்ஞையால், திருமணிமுத்தாற்றில் இட்ட பொன்னைத் திருவாரூர்க் கமலாலயத்தில் எடுத்தனர். முதுகுன்று ஐயர் மதுரையோ - முதுகுன்றையருடைய மதுரையோ நீ வாழுமிடம்; அதனால்தான் தலைவரைப் பரத்தையர் வீட்டிற்கு அழைத்துச் சென்று அங்கே வைத்துவிட்டு இங்கே தேடுகின்றாயென்றாள். எங்கையரென்றது பரத்தையரை. வைத்து - தலைவனுனை இருக்கச் செய்து. பரத்தையர் வீட்டில் தலைவனை வைத்தவன் பாணன். தேர்தி - தேடுகின்றாய். மகிழ்நர் வாழ்க்கை அம் மங்கையர் மனம்போல் அன்றே -தலைவருடைய வாழ்க்கை பரத்தையம் மனம்போல் அமைந்த தல்லவா; அவர்களுடைய விருப்பப்படியே ஒழுகுகின்றாரென்றபடி. எங்கையர் வீட்டிலிருப்பதை நீ அறியாயோ என்றாள்.
|