பக்கம் எண் :

158குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

கட்டளைக் கலித்துறை
183.
பாட்டுக் குருகுந் தமிழ்ச்சொக்க நாதர் பணைப்புயமே
வெட்டுக் குருகுமெய்ந் நாணுன்விட்டாள்வண்டு மென்கிளியும்
பேட்டுக் குருகும்விட் டாளென்செய் வாளனல் பெய்யுமிரு
கோட்டுக் குருகு மதிக்கொழுந் துக்கென் குலக்கொழுந்தே.    
(80)


எழுசீர்ச் சந்த விருத்தம்
184.
ஏமவெற் பென்றுகயி லாயவெற் பென்றுமல
    யாசலத் தென்று முறைவார்
கோமகட் கன்பர்மது ரேசர்முச் சங்கம்வளர்
    கூடலிற் சென்று புகலீர்
தாமரைக் கண்டுயிலு மாலெனச் சந்தமலி
    சாரலிற் றுஞ்சு முகில்காண்
மாமதிப் பிஞ்சுமிரை தேர்குயிற் குஞ்சுமுயிர்
    வாய்மடுத் துணடொ ழிவதே.    
(81)

இதுவென்றது தலைவி படும் பாட்டைக் குறித்து நின்றது. புகையெழும்படி அழலை உமிழ்கின்ற நிலவானது குடதிசையின்கண் கொழுந்தோட. பிறையதலின் குடதிசையைக் கூறினாள். நெருப்பைக் கண்டு அரவு அஞ்சும். படும் பாடாகிய இதனை விளம்பாரோ. யாரேனும் தூதுசென்று விளம்பினால் நலமென்பது எச்சப் பொருள்.

    183. செவிலி கூற்று.

    குருகும் மெய்ந்நாணும்; குருகு - வளை; பேட்டுக் குருகும் - பெண் நாரையையும்; குருகன்பது ஒருவகைப் பறவையென்று கூறுவதுமுண்டு (சீவக. 2102.) விட்டாள் - தூதாக விடுத்தாள். இரு கோடு குருகு மதிக் கொழுந்துக்கு - இரண்டு முனையையுடைய இளம்பிறைக்கு; குருகு - குருத்து; “குருகு பாயநீறிளிரும் பனைமிசை” (பரி. 2 : 43.) கொழுந்துக்கு என் செய்வாள்.

    184.(சந்தக் குழிப்பு.) தானனத் தந்ததன தானனத் தந்ததன தானனத் தந்த தனனா.

    தலைவி கூற்று.

    ஏமவேற்பு - மேருமலை; ஏமம் - பொன். மலயாசலம் ஏமவெற்பையும் கயிலாய வெற்பையும் போன்றதென்று அதில் எழுந்தருளியிருப்பர். மலயாசலம் - பொதியில் மலை; அம்மலை ஒரு வைப்புத்தலம்; “கயிலையும் பொதியிலுமிடமென வுடையார்” (தே.) கோமகட்கு அன்பர் - அரசியாகிய தடாதகைப் பிராட்டியாருக்குக் கணவர்; அன்பராகிய மதுரேசர். முச்சங்கம் ஏளர் கூடல் - இயல் இசை நாடகமென்னும் மூன்று தமிழுக்கும் உரிய சங்கங்கள் வளர்ந்த மதுரை. சந்தமலிசாரல் - சந்தன மரங்கள் மிக்க மலயச் சாரல். மதிப்பிஞ்சு - பிறை. உயிர் - என் உயிரை. உண்டொழிவதைப் புகலீர்.