அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம் 181. | செல்லிட்ட பொழின்மதுரைத் தேவர்மண்ந் தடாதகா | | தேவிக் கன்று | | சொல்லிட்ட குறமகள்யான் றும்மலுநல் வரத்தேகாண் | | சுளகி லம்மை | | நெல்லிட்ட குறிக்குநீ நினைந்ததொரு பொருளதுநித் | | திலக்கச் சார்க்கும் | | வல்லிட்ட குறியினொடும் வளையிட்ட குறியுளதோர் | | |
*சந்தக் கலித்துறை 182. | வடகலை யலபல கலையொடு தமிழ்வள ருங்கூடல் | | விடவர வரையினர் திருமுனி தொருவர்வி ளம்பாரோ | | குடதிசை புகையெழ வழலுமிழ் நிலவுகொ ழுந்தோடப் | | படவர வெனவெரு வருமொரு தமியள்ப டும்பாடே. |
(பி-ம்.)“மாடக் கூடற்’. யாம் சவுந்தர பாண்டிருக்குரிய குடி. (பி-ம்.) ‘சமரிலாற்றா’, ‘மன்னவர்யார்’, ‘மடக்கொடியை’, ‘வார்த்தை சொன்னாய்’. சொன்னாயென்பது வரையில் வந்த தூதுவனைப் பார்த்தும், திருமுகத்திலென்பது முதல் தன்பாலிருந்த ஒரு மறவனை நோக்கியும் தலைவனான மறவன் உரைத்தன. திருமுகத்தில் எழுத்து - ஓலையிலுள்ள எழுத்து திருமுடியில். எழுத்து - தலையெழுத்து. சிகை - குடுமி. தூதுவிட்ட அரசனது தலையை வெட்டிக் கொண்டுவாவென்று சினந்து கூறினான்.
181. ஒரு குறத்தி தலைவியை நோக்கிக் குறி கூறுதல்.
செல் - மேகம். தேவரது மணத்தை. சொல்லிட்ட - சொல்லிய. குறத்தி குறி கூறத் தொடங்குகையில் அருகே இருப்பாருள் ஒருவர் தும்மினர். அதனைக் கேட்டு”, ‘தும்மலுநல் வரத்தேகாண்’ என்றாள்; ‘தும்மல் நன்னிமித்தம்’ (சீவக. 323, ந.) வரத்து - வரவு; “இவண் வரத்தை விட்டனர்” (அழகர் கலம். 44.) சுளகு - சிறு முறம். ஒரு சுளகில் தலைவி நெல்லை இட அந்நெல்லை எண்ணிப் பார்த்துக் குறத்தி குறிகூறத் தொடங்கினாள். குறிக்கு - குறிக்குப் பயன் யாதெனின், நீ நினைத்தது ஒரு பொருளாகும். அது இத்தகையதென்கின்றாள். பின். நித்திலக் கச்சு - முத்தாலாகிய கச்சு (527.) வல் - அம்பிகையின் நகில். அது வடிவு. தான், ஏ : அசை நிலைகள்.
182. (சந்தக் குழிப்பு.) தனதன தனதன தனதன தனதன தந்தானா. செவிலி கூற்று; தோழி கூற்றுமாம். (பி-ம்.) *நெடிலடி விருத்தம். கூடலில் வடகலையும் தமிழும் வேறு பல கலையும் வளருமென்பது கருத்து (204.) விட அரவையுடைய அரையினர்; அரை - இடை. சிவபெருமான் பாம்பை அரைக்கச்சாக அணிந்துள்ளார். திருமுன் - ஸந்நிதியில்.
|