பக்கம் எண் :

மதுரைக் கலம்பகம்165

நேரிசை யாசிரியப்பா
191.
முட்டாட் பாசடை நெட்டிதழ்க் கமலத்
திரைவர வுறங்குக் குருகு விரிசிறைச்
செங்கா னாரைக்குச் சிவபதங் கிடைத்தெனப்
பைம்புன்ன் மூழ்கிப் பதும பீடத்
5
தூற்றமி றாமு முலப்பில் பஃறவம்
வீற்றுவீற் றிருந்து நோற்பன கடுக்கும்
குண்டுநீர்ப் பட்டத் தொண்டுறைச் சங்கமும்
வண்டமிழ்க் கடலின் றந்துறைச் சங்கமும்
முத்தகம் பயின்று காவியங் கற்றுச்
10
சித்திரப் பாட்டிய றேர்ந்தன செல்லும்
தடம்பணை யுடுத்த தண்டமிழ்க் கூடல்
இடங்கொண் டிருந்த விமையா முக்கட்
கருமிடற் றொருவநின் றிருவடி வழுத்துதும்
தாய்நலங் கவருபு தந்தயுயிர் செகுத்தாங்

    191. (அடி, 1-6) முள்ளையுடைய தண்டையும் பசிய இலையையும், நெடிய இதழையும் உடைய தாமரை மலரில். குருகு - நாரை. பதும பீடம் - தாமரையாகிய இருக்கை; யோகம் புரிவார்க்குரிய பதுமாஸனமென்று வேறொரு பொருள் தோன்றியது. ஊற்றம் - மனவுறுதி. உலப்பில் - அழிவில்லாத. வீற்று வீற்று இருந்து - தனித்தனியே இருந்து. கடுக்கும் - ஒக்கும்.

    (7-10) சங்குக்கும் தமிழ்ச் சங்கத்துக்கும் சிலேடை. குண்டு ஆழம். பட்டம் - குளம். சங்கம் - சங்கு. தமிழாகிய கடலின் குளிர்ந்த துறைகளைப் பயிலும் சங்கமும்; சங்கம் - புலவர் கூட்டம். சங்கு முத்தை அகத்தே பயன்று காவில் இயங்குதல் அற்றுச், சித்திரமாகிய பாட்டின் இயலைபைத் தேர்ந்து முழங்குவனவாகச் செல்லும் என்க; கா - சோலை; இயங்கு - இயங்குதல்; சித்திரம் - அழகு; பாட்டு - பலவகை ஒலி. தமிழ்ச் சங்கமானது முத்தகமென்னும் செய்யுளைப் பயின்று காவியங்களைக் கற்றுச் சித்திரகவிகளின் இலக்கணத்தை ஆராய்வனவாகி நடைபெறும்; முத்தகம் - வினைமுற்றிய தனிச் செய்யுள்; சித்திரப் பாட்டியல் - அழகையுடைய பட்டயலென்னும் இலக்கணமும் ஆம்.

    (11) தட பணை - பெரிய வயல்கள்.