15 | கிருபெருங் குரவரி னொருபழி சுமந்த | | புன்றொழி லொருவற்குப் புகலின்மை தெரீஇ | | அன்றருள் சுரந்த தொன்றோ சென்றதோர் | | வலியாற் கருள்வதூஉ நோக்கி | | எளியார்க் கெளியைமற் றென்பது குறித்தே. |
எண்சீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம் 192. | குறுமுயலுஞ் சிலகலையு மிழந்தொருமா னுயிரைக் | | கொள்ளைகொள்ள வெழுந்தமதிக் கூற்றே யாற்றாச் | | சிறுதுயிலும் பெருமூச்சுங் கண்டுமிரங் கலையாற் | | றெறுமறலி நீயேயித் தெண்ணி லாவும் |
(14-9) சோமசுந்தரக் கடவுள் மாபாதகந்தீர்த்த திருவிளையாடற் செய்தியும், கரிக்குருவிக்கு அருள் செய்த திருவிளையாடற் செய்தியும் இவ்வடிகளிற் கூறப்படும்.
தாய் நலம் கவருபு: இடக்கர். செகுத்து - கொன்று. ஆங்கு; அசை நிலை. ஒருபழி - ஒப்பற்ற பாதகம். புகல் - அடைக்கலத் தானம். தெரீஇ - உணர்ந்து. சென்றதோர் - தன்பால் வந்து அடைந்ததாகிய ஒரு. வலியான் - கரிக்குருவி. எளியார்க்கு எளியை - எளியவர்களுக்கு எளியையாக உள்ளாய்; “எளியரெங்குளா ரென்று தேர்ந்துரேந், தளியை யாவதுன் னருளின் வண்ணமே” (திருவிளை. 47 : 15.) மற்று: அசைநிலை.
(முடிபு.) ஒருவ, எளியை யென்பது குறித்து வழுத்துதும்.
(கருத்து.) எளியார்க்கெளியையாதலை யெண்ணி எளியேமாகிய எம்மையும் ஆண்டருள்வாயென்னும் கருத்தினால் நின்னை வழுத்துவேம்யாம்.
192. இது பிறையை நோக்கித் தோழி கூறியது.
முயலென்றது களங்கத்தை. கலை - கிரணம். பிறைக்குக் களங்கமில்லையாதலின் முயலையிழந்ததாகக் கூறினாள். பிறையே. நீ ஒரு முயலையும் சில ஆண்மான்களையும் இழந்துவிட்டு வேறொரு பெண்மானின் உயிரைக் கொள்ள எழுந்தாயென ஓர் இகழ்ச்சிப் பொருள் தோற்றியது. ஒரு மான் - தலைவி. மதியாகிய கூற்றே; கூற்று - யமன். பெருமூச்சு - துயர மிகுதியால் விடும் மூச்சு; உயிர் நீங்குவோர்க்கு உளதாகும் ஊர்த்துவ சுவாச மென்பது வேறு பொருள். மறலி - யமன். (பி-ம்.) ‘பாசமுமே’. உன்னுடைய பாசம் நிலாவுருவத்தை யெடுத்தது (675); கரிய உடலையுடைய நீ முதுகு வளைந்து முதிர்ந்த நரையினால் அக்கரிய நிறத்தையு
|