பக்கம் எண் :

மதுரைக் கலம்பகம்167

எறியுநெடும் பாசமே யுடலுமறக் கூனி    
   இருணிறமு முதிர்நரையா லிழந்தாய் போலும்    
நறுநுதலா ரென்கொலுனை மதுரேசர் மிலைச்சும்    
   நாகிளஙெண் டிங்களென நவில்கின் றாரே.        
(89)

        *பதினான்குசீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம்
193.
நவ்வி யங்கண் மானு மானு மினிது கந்தி டங்கொள்வார்
   நஞ்ச மார்ந்தென் னெஞ்ச மார்ந்து நனிக ளங்க றுத்துளார்
கைவி ளங்கு குன்று மன்றுங் கோவி லாக்கு னித்துளார்
   கன்னி நாடம் மதுரை வாணர் கநிலை வெற்பர் வெற்பனீர்
கொவ்வை வாய்வி ளர்ப்ப மைக்க ருங்க ணுஞ்சி வப்பவே
   குளிர்த ரங்க வைகை நீர்கு டைந்து டன்றி ளைத்திராற்
வைவி ரிந்த வல்கு லீர் நும் மன்னை மார்கள் சங்கையிற்
   படில வர்க்கு வீணி மீவிர் பரிக ரித்தலை பாவமே.    
(90)

மிழந்தாய். இங்ஙனம் கொடுமையும் முதுமையும் உடைய நின்னை மகளிர் கருணையங்கடலாகிய சிவபெருமான் அணியும் இளந்திங்களென்று கூறுதல் என்ன பேதைமை? நாகிள வெண்டிங்கள் - மிக இளைய சந்திரன்.

    193. (பி-ம்.) *சந்தத் தாழிசை. தோழி கூற்று.

    நவ்வியங்கண் மான் - உமாதேவதியார். இடம் - வாம பாகம், இடத்திருக்கரம். நஞ்சம் ஆர்ந்து - விடத்தை உண்டு. நெஞ்சம் ஆர்ந்து - உள்ளத்தில் எழுந்தருளி. (பி-ம்.) ‘நெஞ்சமர்ந்து’. நஞ்சம் ஆர்ந்து களம் கறுத்துளார்; களம் - கழுத்து. நெஞ்சம் ஆர்ந்து களங்கு அறுத்துள்ளார்; களங்கு - களங்கம்; அறியாமை; நிமித்தம் நிமித்தென்று வந்தது போன்றது இது (நன். 49.) கை விளங்கு குன்று - மேருமலை; கோவிலாக் குனித்துளார் - தலைமையையுடைய வில்லாக வளைத்தார். மன்று கோவிலாகக் குனித்துளார் - அம்பலத்தைக் கோயிலாகக் கொண்டு திருநடம் புரிந்தார். வெற்பு அன்னீர். விளர்ப்ப - வெண்ணிறமடைய. (பி-ம்.) ‘கொழி தரங்க்’. உடம் - ஒருங்கு. தளைத்திர் - ஆடிமீர். பை- படம். சங்கையிற் படில் - ஐயமுற்றால்; ஐயமுறுதலாவது நீராடியதனால் உண்டான வேறுபாடுகளைத் தலைவரோடு அளவளாவியதனால் வந்தனவெனக் கொள்ளுதல். பரிகரித்தல் - போக்குதல். பாவமென்றது இரக்கத்தைக் குறித்து நின்றது. தாய்மாரது ஐயத்தைப் போக்குதல் அரிதென்றபடி.