235. | இன்று கொளற்பால நாளைக் கொளப்பொறான் | | நின்று குறையிரப்ப நேர்படான் - சென்றொருவன் | | ஆவன கூறி னெயிறலைப்பா னாறலைக்கும் | | |
236. | முடிப்ப முடித்துப்பின் பூசுவ பூசி | | உடுப்ப வுடுத்துண்ப வுண்ணா - இடித்திடித்துக் | | கட்டுரை கூறிற் செவிக்கொளா கண்விழியா | | நெட்டுயிர்ப்போ டுற்ற பிணம். |
அரசன் குடிகளிடம் வரி கொள்ளும் முறை, “காய்நெல்லறுத்து” (புறநா. 184), “வாய்ப்படுங் கேடு மின்றாம்” (சீவக. 2907), “கற்றைவை களைந்து” (திருவிளை. நாடு. 28), “மாநிரப் புறா” (சீகாழிப் புராணம், பூத விமோசன. 7) என்னும் செய்யுட்களால் அறியப்படும். (பி-ம்.) ‘கொள்வோர்க்கு’. காண்டும் - கண்கூடாகக் காண்போம். வெள்ளம் - ஒரு பேரெண். மாநிதியம் வெள்ளத்தின் மேலும் பலவாதலைக் காண்டுமென்க. (பி-ம்.) நீணிதியம்.
அளவறிந்து இறை வாங்க வேண்டு மென்பது கருத்து.
235-6. இவ்விரண்டு பாட்டுக்களாலும் கொடுங்கோலரசன் இயல்பு கூறப்படும்.
235. கொளற்பால - கொள்ளும் அளவான வரிகளை.குடிகள்குறையிரப்ப.நேர்படான்-உடண்படான்.ஒருவன்- அமைச்சர்களுள் அறிவுடையானொருவன்; ஒருவனென்றார், அரசனை எதிர்த்துச் சொல்லுதலின் அருமைபற்றி. எயிறலைத்தல் - பற்களைக் கடித்தல்; கோபித்தல். ஆறு ஆலைக்கும் - வழிப்போவாரை வருத்திப் பொருளைக் கொள்ளும். வேடு - வேடன். அவ்வரசன் வேடனுமல்லன்; வேந்தனும் அல்லன்.
ஆறலைக்கும் வேடனுக்குரிய இயல்புடையானாயினும் குடிப்பிறப்பு முதலியவற்றால் வேடனாகக் கூறப்பெறான்; அவற்றால் வேந்தனாயினும் இயல்புகளால் வேந்தனாக்க் கூறப்பெறான். இங்ஙனம் கூறினும் ஆறலைக் கள்வரோடு ஒப்பானென்பதே ஆசிரியர் கருத்து.
236. முடிப்ப - முடித்தற்குரிய மலர் முதலியவற்றை. உண்ணா - உண்டு. இடித்து இடித்து: அடுக்கு இடைவிடாமை மேற்று; “பொய்யாமை பொய்யாமை யாற்றின்” (குறள், 296) என்பது போல. கட்டுரை - நன்மையைத் தரும் உறுதி மொழிகள். அமைச்சர்கள் கூறின். செவி கொள்ளாதனவும், கண் விழியாதனவுமாகிய அரசுகள் பிணம் செறல் பற்றி அஃறிணையாற் கூறினார். நெட்டுயிர்ப்போடுற்ற பிணம் என்றதனால், மற்றப் பிணங்களுக்கும் இத்தகைய கொடுங்கோலரசுகளுக்கும் உள்ள வேறுபாடு கூறப்பட்டது.
|