233. | கண்ணிற் சொலிச்செவியி னோக்கு மிறைமாட்சி | | புண்ணியத்தின் பாலதே யாயினும் - தண்ணளியால் | | மன்பதை யோம்பாதார்க் கென்னார் வயப்படைமற் | | றென்பயக்கு மாணல் லவர்க்கு. |
234. | குடிகொன் றிறைகொள்ளுங் கோமகற்குக் கற்றா | | மடிகொன்று பால்கொளல் மாண்பே - குடியோம்பிக் | | கொள்ளுமா கொள்வோற்கு காண்டுமே மாநிதியம் | | |
பிதாவு முன்னறி தெய்வம்” (கொன்றை வேந்தன்.) அறவோர் - துறவாமல் விரதங் காப்போர் (சிலப். 16 : 71. அரும்பத.); பிரமசாரிகளெனினும் ஆம். அடிகள் - ஆசிரியர். ஏகாரங்கள் தேற்றப்பொருளன. இலைமுகப் பைம்பூண்: (சீவக. 2107) இறை - அரசன். உலகபாலர் உருவாய் நின்று உலகங்காத்தலின் அரசனைத் தெய்வமென்றார் (குறள், 39-ஆம் அதி. அவதாரிகை.)
233. கண்ணிற் சொல்லுதல் - குறிப்பால் அறிபவர்க்குக் காரியங்களைக்கண்ணாற் குறிப்பித்தல். செவியின் நோக்குதல் - நாட்டில் அங்கங்கே நடப்பவற்றை ஒற்றர் மூலமாக்க் கேட்டு அறிந்து கொள்ளுதல். “செவியிற் கண்டு கண்ணிற் கூறி, இருநிலம் புரக்கு மொருபெரு வேந்தன்” (475) என்பர் பின்னும். இறைமாட்சி - அரசுரிமையாகிய மே்ம்பாடு. புண்ணியத்தின் பாலதே ஆயினும் - முற்பிறப்பிற் செய்த அறத்தின் பயனாகக் கிடைத்ததாயினும்; “பறர வந்த பழவிற்ற் றாயம்” (புறநா. 75 : 2.) மன்பதை - மக்கட்டொகுதி; பிறவுயிர்களையும் காத்தலுண்டாயினும் சிறப்புப் பற்றி மக்களை எடுத்துக் கூறினார். என்னால் - என்ன பயனைத் தரும்? இறைமாட்சி என்னாம்? வயப்படை - வன்மையுள்ள ஆயுதம். ஆணல்லவர் - பேடிகள்; ஆணல்லவர்க்கு வயப்படை என் பயக்கும் என்க. படை நன்றாயிருந்ததாயினும் பேடியின் குற்றத்தால் அது பயனடையாதவாறு போல, நல்ல நாடு வாய்த்ததாயினும் ஆள்பவனுடைய குற்றத்தால் அவன் அரசாட்சி சிறப்படையாதென்பது கருத்து; “தாளாண்மை யில்லாதான் வேளாண்மை பேடிகை, வாளாண்ம் போலக் கெடும்”, “பகையகத்துப் பேடிகை யொள்வாளவையகத், தஞ்சு மவன்கற்ற நூல்” (குறள், 614, 727) எனப் பிறரும் ஒரு பொருளைப் பெற்றும் அது பயனடையாமையை விளக்குதற்கு இந்த உவமையைக் கூறுதல் காண்க.
234. குடி கொன்று - குடிகளை வருத்தி; கொல்லல் - வருத்துதல்; “கரும்புபோற், கொல்லப் பயன்படுங் கீழ்” (குறள், 1078.) இறை - வரியை. மடி கொன்று - மடியை அறுத்து. கொள்ளுமா - கொள்ளும் வழியால். கொள்வோற்கு - ஆறில் ஒரு பங்கை கொள்ளும் அரசனுக்கு; விளைவில் ஆறில் ஒரு பங்கை அரசன் கொள்ளவேண்டு மென்பது, “தென்புலத்தார் தெய்வம்” (குறள், 43) என்பதன் விசேட வுரையால் விளங்கும்.
|