பக்கம் எண் :

188குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

230.
கற்றன கல்லார் செவிமாட்டிக் கையுறூஉம்  
குற்றந் தமதே பிறிதன்று முற்றுணர்ந்தும்  
தாமவர் தன்மை யுணரா தார் தம்மணரா  
ஏதிலரை நோவ தெவன்.    
(24)

231.
வேத்தவை காவார் மிகன்மக்கள் வேறுசிலர்    
காத்தது கொண்டாங் குகப்பெய்தார் - மாத்தகைய    
அந்தப் புரத்தது பூஞை புறங்கடைய    
கந்துகொல் பூட்கைக் களிறு.    
(25)

232.
குலமகட்குத் தெய்வங் கொழுநனே மன்ற    
புதல்வர்க்குத் தந்தையுந் தாயும - அறவோர்க்    
கடிகளே தெய்வ மனைவோர்க்குந் தெய்வம்    
இலைமுகப் பைம்பூ ணிறை.     
(26)

    230. கற்றன - தாம் கற்ற நூற்பொருள்களை. செவிமாட்டி - செவியின்கண் வலியப் புகுத்தி, கையுறூஉம் குற்றம் - தாம் சிறுமை யடைதற்கு ஏதுவாகிய குற்றமானது. பிறிது அன்று - வேரொருவரது குற்றம் அன்று. ‘கற்றாருடைய பெருமையை அறியாத குற்றம் அக்கல்லாதாருடைய தன்றோ’ என்பாருக்கு விடை பின் கூறுகின்றார். முற்று உணர்ந்தும் - எல்லாம் அறிதிருதந்தும். தாம் - கற்றார். அவர் - கல்லாதாரைடைய. உணராதாராகிய தாம். தம் உணரா - கற்றாராகிய தம் பெருமையை உணராத. ஏதிலரை - அயலாராகிய கல்லாதாரை; அது சுட்டுப் பெயரளவாய் நின்றது. எவன் - என்ன பயன்கருதி.

    213. இதுமுதல் 15 - பாட்டுக்களால் அரசியல்பு கூறப்படும்.

    வேந்து அவை. மிகல் மக்கள் - கல்வி அறிவு ஒழுக்கங்களால் மிக்கவர்; மிகல் மக்கள் காவார். வேறு சிலரென்றது கல்வி முதலியன இல்லாதவரை. காத்து அது கொண்டு. உகப்பு - உயர்வை; “உகப்பே யுயர்தல்” (தொல். உரி. 8.) சிலர் உகப்பெய்தார். (பி-ம்.) ‘உவப்பெய்தார்’. பூஞை - பூனை. கந்து கொல் - கட்டுத்தறியை முறிக்கின்ற.

    அரண்மனைவாயிலில் நிற்கும் யானை போர்க்காலத்திற் போர் செய்தற்குப் பயன்படுதலும், அந்தப்புரத்திலுள்ள பூனை சோர்வறிந்து அங்குள்ள சிறந்த உணவுகளைமட்டும் உண்பதற்கன்றி வேறெதற்கும் சிறிதும் பயன்பதாமையும் போலப் பெரியோர் அரசனுக்கு அருகில் இராவிடினும் தக்க சமயத்திற் பயனளித்தலும் சிறியோர் இடைவிதாமற் காதிருந்தும் உண்டி முதலிய பயனைத் தாம் அடைதலன்றி யாதோர் உயர்வும் அடையாத்தோட் அவமதிப்பை அடைதலும் இங்கே அறிதற்பாலன.

    இஃது எடுத்துக்காட்டுவமையணி.

    232. இன்னாருக்கு இன்னார் தெய்வமென்பதைக் கூறுகின்றார். குலமகட்கு - கற்புடையவளுக்கு. மன்ற - நிச்சயமாக. புதல்வர்க்குத் தந்தையும் தாயும் தெய்வமெனப் பின்னுங் கூட்டுக; “அன்னையும்