228. | கற்பன வூழற்றார் கல்விக் கழகத்தாங் | | கொற்கமின் றூத்தைவா யங்காத்தல் - மற்றுத்தம் | | வல்லுரு வஞ்சன்மி மென்பவே மாபறவை | | |
229. | போக்கறு கல்வி புலமிக்கார் பாலன்றி | | மீக்கொ ணகையினார் வாய்ச்சேரா - தாக்கணங்கும் | | ஆணவாம் பெண்மை யுடைத்தெனினும் பெண்ணலம் | | |
228. கற்பன ஊழ் - கற்றற்குரிய நல்லூழ். கல்விக் கழகம் - புலவர் நிறைந்த சபை. ஆங்கு : அசைநிலை. ஒற்கம் இன்று - நாவடக்கம் இல்லாமல். ஊத்தைவாய் - தூய்மையற்ற வாய்; பயனற்ற சொற்களைக் கூறும் வாயென்பது பொருள். அங்காத்தல் - திறத்தல். மற்று - அசைநிலை. வல் உரு - எம் வலிய உருவம். என்ப - என்று கூறுதல். அங்காத்தல், அஞ்சன்மின் என்று கூறுதலைப் போலும் என ஒரு சொல் வருவித்து முடிக்க. மா பறவை - மாவும் பறவையும்; மா - மான் முதலிய விலங்கு. புல்லுரு - தினைப்புனம் முதலிய இடங்களில் விளைந்த தானியக் கதிரைக் கவர்தற்கு வரும் விலங்கும் பறவையும் அஞ்சும் பொருட்டுப் புல்லால் அமைத்து வைக்கப்படும் உருவம்: “கொல்லா வம்புஞ் சமர்க்களத்திற் குனியா வில்லுங் கொண்டு நிற்கும், புல்லா டவமே”(அருணைக்கலம். 19.) அஞ்சுவ போல் - அஞ்சுதலைப் போல. தம் உருவத்தைக் கண்டு அஞ்சி யிருப்பாரைத் தம் சொல்லால் தமது அறியாமையைத் தாமே வெளிப்படுத்தி அவ்வச்சத்தைப் போக்குவரென்றார்.
229. போக்கறு கல்வி - குற்றமற்ற கல்வி; த்ம்மிடத்தினின்றும் போதல் அற்ற கல்வி யெனலும் ஆம் (214.) புலமிக்கார் - அறிவுமிக்கவர். மீக்கொள் நகையினார் வாய் - மேற்பட்ட, உள்ளீடில்லாத நகையையுடையவரிடத்து; நகையினா ரென்றது கற்றலிற் கருத்தைச் செலுத்தாமல் நகைத்து வீண்பொழுது போக்குவாரை. தாக்கணங்கும் ஆண் அவாம் பெண்மை - தீண்டி வருத்தும் பெண் தெய்வமும் இன்பமு நுகர்தற்பொருட்டு ஆன் உருவத்தை எடுக்க விரும்பும் பெண் தோற்றத்தை. பேடு உடைத்தெனினும். பெண் நலம் கொளப்படுவது இல் - அப்பேட்டினிடத்தில் பிறராற் பெண்ணின்பம் கொள்ளப்படுதலென்பது இல்லையாகும்ழ பேடு, மிக்க அழகுடைய பெண்ணப் போன்ற தோற்றம் உடையதாயினும் பெண்ணால் வரும் இன்பத்தைத் தரும் இயல்புடையதன்று என்றபடி.
அறிவுடையாருக்கே கல்விவன்மை உண்டாகும் என்பது கருத்து. கற்பிக்கப்படாதாருள் இருவனாக அறிவில்லான்த, ‘ஏழை’ என்னும் பெயராற் கூறப்படுதல் காண்க.
|