225. | பிறராற் பெருஞ்சுட்டு வேண்டுவான் யாண்டும் | | மறவாமே நோற்பதொன் றுண்டு - பிறர்பிறர் | | சீரெல்லாந் தூற்றிச் சிறுமை புறங்காத்து | | யார்யார்க்குந் தாழ்ச்சி சொலல். |
226. | கற்றுப் பிறர்க்குரைத்துத் தாம்நில்லார் வாய்ப்படூஉம் | | வெற்றுரைக் குண்டோர் வலியுடைமை - சொற்றநீர் | | நில்லாத தென்னென்று நாணுறைப்ப நேர்ந்தொருவன் | | |
227. | பிறர்க்குப் பயன்படத் தாங்கற்ற விற்பார் | | தமக்குப் பயன்வே றுடையார் திறப்படூஉம் | | தீவினை யஞ்சா விறல்கொண்டு தென்புலத்தார் | | |
225. பெருஞ்சூட்டு - பெருமதிப்பு. யாண்டும் - எவ்விடத்தும் எக்காலத்தும். (பி-ம்.) ‘மறவாமை’. நோற்பது - நோற்றல்; உளங்கொண்டு அயர்வின்றிச் செய்யத் தகுவதாதலாலும் விளையும் பயன் பெரிதாதலாலும் இச்செயலை நோற்றலென்றார். தூற்றி - பலர் அறியச் சொல்லி. புறங்காத்து - தாம் அறிந்திருந்தாலும் அவற்றை வெளியிடாமல் அடக்கி. தாழ்ச்சி - வணக்கத்தைப் புலப்படுத்தும் சொற்களை; “வணங்கிய வாயினர்” (குறள், 419.)
நோற்பது ஒன்று உண்டு; அது தாழ்ச்சி சொல்ல் என்க.
இது மக்களாகப் பிறந்தார் யாவருக்கும் கூறிய அறிவுரை.
226. தாம் நில்லார் - கற்பவை கற்ற பின் நிற்க அதற்குத் தக என்றபடி நில்லாதவர். வெற்றுரை - பயனற்ற சொல். என் - என்ன காரணம்? நாண் உறைப்ப - நாணம் மிகும்படி. நேர்ந்து - எதிர்ப்பட்டு. சூழ்ந்து - ஆராய்ந்து. ஆராய்தலாவது தன்னைக் கடிந்து கூறுவான் அங்கே இல்லாதிருத்தலை ஆராய்ந்தறிதல்.
வலியுடைமையாவது சூழ்ந்து சொல்லலென்க.
கற்றபடி நிற்றல் வேண்டுமென்பது கருத்து.
227. பிறர்க்குப் பயன்பட - தமக்கும் பிறர்க்கும் பயன்படுவதை எண்ணாமற் பிறர்க்கே பயன்படும்படி. கற்றவற்றை விற்பார். பயனைப் பின் இரண்டடிகளிற் கூறுவார். தீவினை அஞ்சா விறல் - தீவினையை அஞ்சாத வீரம்; விறலென்றது இகழ்ச்சிக் குறிப்பு. தென்புலத்தார் கோ - யமன். அவனை வேலை கொளலாவது அவன் பலவகையான தண்டனையைப் பலமுறை செய்யும்படி செய்வித்தல். யமதண்டத்தை அடைவதே அவர் பெறும் பயனென்றபடி.
“கற்பார் பொருள்காணார் காசுபணங் காணிலுனை, விற்பாரவர் பானீ மேவாதே” (தமிழ்விடு, 184) என்பதிலும் விற்றலின் இழிவு புலப்படுத்தப்படுகின்றது.
|