222. | ஆக்கம் பெரியார் சிறியா ரிடைப்பட்ட | | மீச்செலவு காணி னனிதாழ்ப - தூக்கின் | | மெலியது மேன்மே லெழச்செல்லச் செல்ல | | வலிதன்றே தாழுந் துலைக்கு. |
223. | விலக்கிய வோம்பி விதித்தனவே செய்யும் | | நலத்தகையார் நல்வினையுந் தீதே - புலப்பகையை | | வென்றன நல்லொழுக்கி னின்றேம் பிறவென்று | | |
224. | தன்னை வியப்பிப்பான் றற்புகழ்த றீச்சுடர் | | நன்னீர் சொரிந்து வளர்த்தற்றாற் - றன்னை | | வியவாமை யன்றே வியப்பாவ தின்பம் | | |
கற்றாருக்கும், “எல்லார்க்கு நன்றார் பணித லவருள்ளும், செல்வர்க்கே செல்வந் தகைத்து” (குறள். 125) என்பதனால் செல்வருக்கும் பணிவுடைமை வேண்டுமென்று பெரியோரும் பணித்தனர்.
222. ஆக்கம் - அறிவின் அமைதியில். சிறியார் - அறிவில்லாதவர். மீச்செலவு - மீதூரந்த நடையை. நனி - மிகவும். தாழ்ப - தாழ்வர். பெரியார் தாழ்வார் (பிரபு. மாயை யுற்பத்தி. 14.) தூக்கின் - தூக்கிப் பார்க்குமிடத்து. மெலியது - கனமில்லாத தட்டு. வலிது - கனமுள்ள தட்டு. துலைக்கு - துலையின்கண்.
223. இச்செய்யுளிலும் அடுத்த செய்யுளிலும் தற்புகழ்ச்சியால் விளையும் தீங்கு கூறப்படும்.
விலக்கிய ஓம்பி - அறநூல்களில் ஆகாவென்று விலக்கப்பட்டன தம்மால் நிகழாமற் காத்து. விலக்கிய ஓம்பி விதித்தன செய்தலே அறமாகும்; ‘அறமாவது மனுமுதலிய நூல்களில் விதித்தன செய்தலும், விலக்கியன ஒழிதலுமாம்’ (குறள், உரைப்பாயிரம், பரிமேல்.) நலத்தகையார் - அறத்தின்வழி நிற்பார். தீதே - தீவினையேயாகும். புலப்பகை - புலன்களாகிய பகையை. வென்றனம் - வென்றோம்; இந்திரியங்களை அடக்கி வென்றோம். பிற : அசைநிலை. தம் பாடு - தம் பெருமைகளை. தம்மிற்கொளின் - தாமே உட்கொண்டு நினைத்திருப்பின். கொளின் தீதேயென இயைக்க.
தம் பெருமையைத் தாமே நினைத்தலும் குற்றமென்றபடி.
224. வியப்பிப்பான் - பிறரைக் கொண்டு தன்னை வியக்கும்படி செய்பவன். தீச்சுடர் - விளக்கை. வளர்த்தற்று - வளர்த்தாற் போல்வது. எண்ணிய பயனைத் தராதென்றபடி. நலம் - இன்பம்.
முன்பாட்டில் ஒருவர் தம் புகழைத் தாமே நினைத்தல் குற்றமென்றவர் இப்பாட்டில் அதனைத் தாம் கூறுதலும் குற்றமென்பதை உதாரண முகத்தால் விளக்கினார்.
|