263. | மனத்த கறுப்பெனி னல்ல செயினும் | | அனைத்தெவையுந் தீயவே யாகும் - எனைத்துணையும் | | தீயவே செய்யினு நல்லவாக் காண்பவே | | |
264. | இனியவ ரென்சொலினு மின்சொல்லே யின்னார் | | கனியு மொழியுங் கடுவே - அனல்கொளுத்தும் | | வெங்காரம் வெய்தெனினு நோய்தீர்க்கு மெய்பொடிப்பச் | | சிங்கிக் குளிர்ந்துங் கொலும். |
அறியப்படாத தீய செயல்களை. வட்கார்திறத்தராய் - பகைவருடைய சார்பினராகி; வட்கார் - பகைவர் (புறநா. 100:3, உரை.) திட்பமா - திண்ணமாக. நாள் உலந்தது - வாழ்நாள் முடிவுற்றது. உட்பகையா யிருந்து நம் தலைவர்க்குக் கேடு சூழ்வார், உயிரோடு கூடியிருப்பினும் இறந்தாரோடு ஒப்பரென்பது கருத்து; அவர் உயிர் வாழக் காண்கின்றோமே யென்று வினாவுவார்க்கு ‘நடுவன் ............மறந்து’ என்பது விடை. அத்தகையாருடைய உயிரைக் கொள்ளாமை யமனுக்கு நடுவின்மை; நடுவின்மையால் மறந்து வாளா அவன் கிடப்பன். கிடப்பனென்றதனால் யமனை இகழ்ந்தபடி. (பி-ம்.) ‘கிடத்த்ல்’. நடுவன் - யமன்; வாளா - சும்மா. மற்று : அசைநிலை.
263. அறம் செய்தற்கு மனத்தூய்மை இன்றியமையாத்தென்பது கூறப்படும்.
கறுப்பு மனத்தவெனின் - குற்றங்கள் மனத்தின்கண் உள்ளன வென்றார்; மனத்திற் குற்றமாவது தீயனவற்றை நினைத்தல். “மைபொதி விளக்கே யென்ன மனத்தினுட் கறுப்பு வைத்து” (பெரிய. மெய்ப்பொருள்.) நல்ல செயினும்: உம்மை உயர்வு சிறப்பு. அனைத்து எவையும் - அவை யாவும். தீயவே: ஏகாரம் பிரிநிலை. எனைத்துணையும் - எவ்வளவிலும், மாசில் மனத்தினர் தீயவே செயினும் அவற்றை நல்லனவாக அறிஞர் காண்பவென இயைக்க; காண்ப - அறிவார்கள்.
“மனத்துக்கண் மாசில னாத லனைத்தறன், ஆகுல நீர பிற” (குறள்,34.)
264. சொற்களை அவற்றின் பயன் நோக்கிக் கொள்ள வேண்டுமென்பது கூறப்படும்.
என் சொலினும் - எத்தகைய கடுஞ்சொற்களைக் கூறினாலும். இன் சொல்லே யென்றது அவை இறுதியில் நன்மையைத் தருதல் நோக்கி. என்றதனால் அவர் கூறும் இன்சொல் நன்மை பயத்தல் கூறவேண்டாததாயிற்று. இன்னார் - பகைவர். கனியும் மொழியும் - அவர் மனங்கனிந்து சொல்லும் சொற்களும். கடுவே - விஷத்தை ஒப்பனவேயாம். வெங்காரம் :
|