265. | பொய்குறளை வன்சொல் பயனிலவென் றிந்நான்கும் | | எய்தாமை சொல்லின் வழுக்காத்து - மெய்யிற் | | புலமைந்துங் காத்து மனமா சகற்றும் | | |
266. | நல்லா றொழுக்கின் றலைநின்றார் நல்கூர்ந்தும் | | அல்லன செய்தற் கொருப்படார் - பல்பொறிய | | செங்கட் புலியே றறப்பசித்துந் தின்னாவாம் | | |
ஒருவகை மருந்துச் சரக்கு. வெய்தெனினும் - வெப்பமுடையதானாலும். சிங்கி மெய்பொடிப்பக் குளிர்ந்தும் - விஷம் மெய்யில் புளகம் தோற்றும்படி குளிர்ந்தத்தாயினுத். “மாசற்ற நெஞ்சுடையார் வன்சொலினி தேனையவர், பேசுற்ற வின்சொல் பிறிதென்க - ஈசற்கு, நல்லோ னெறிசிலையோ நன்னுதா லொண்கருப்பு, வில்லோன் மலரோ விருப்பு” (நன்னெறி, 2.) இச்செய்யுள் எடுத்துக்காட்டுவமையணி.
265. மனம் வாக்குக் காயம் என்னும் மூன்றின் தூய்மை கூறப்படும்.
குறளை - காணாத விடத்துப் பிறரை இகழ்ந்துரைத்தல். பயனில - தமக்கும் பிறர்க்கும் அறம்பொருள் இன்பமாகிய பயன்களுள் ஒன்றும் இல்லாதனவாகிய சொற்கள். பொய் முதலிய நான்கும் வாக்கின்கண் நுகழும் பாவங்கள். எய்தாமை - அடையாதபடி. சொல்லின் வழு - சொற் குற்றங்கள். புலமென்றது இங்கே பொறிகளை. அவற்றைக் காத்தலாவது, மெய்யின்கண் நிகழும் கொலை களவுகாமமென்னும் மூன்றும் நிகழாதபடி காத்துக் கொள்ளுதல். மனமாசு - மனத்தின்கண் தோன்றும் வெஃகல் வெகுளல் மயக்கமென்னும் குற்றங்கள் மூன்றும். அகற்றும் - விலக்கும்.
வழுக்காத்து, புலமைந்தும் காத்து, மாசகற்றும் நலமன்றே நல்லாறெனல்.
“கொலையே களவே காமத் தீவிழை, வுலையா உடம்பிற் றோன்றுவ மூன்றும், பொய்யே குறளை கடுஞ்சொல் பயனில், சொல்லெனச் சொல்லிற் றோன்றுவ நான்கும், வெஃகல் வெகுளல் பொல்லாக் காட்சியென், றுள்ளந் தன்னி னுருப்பன மூன்றுமெனப், பத்து வகையாற் பயன்றெரி புலவர், இத்திறம் படரார்” (மணி. 24: 125-32.)
266. பெரியோர் வறுமையிலும் தம் இயல்பினின்றும் மாறுபடாரென்பது கூறப்படும்.
நல்லாறொழுக்கின்றலை நின்றார் - நல்ல நெறியின்கண் ஒழுகுதலில் நிலை பெற்றவர்; நல்லாறு முன்பாட்டிற் கூறப்பட்டது. ஒழுக்கு - ஒழுகுதல், நல்கூருந்தும் - வறியரானாலும். அல்லன - பாவச் செயல்களை. ஒருப்படார் - உடன்படமாட்டார். பல்பொறிய - பல வரிகளையுடைய. அறப் பசித்தும் - மிகப் பசித்ததாயினும், பைங்கண் புனத்த - பசிய இடத்தை
|