பக்கம் எண் :

204குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

267.
குலம்விற்றுக் கொள்ளும் வெறுக்கையும் வாய்மை
நலம்விற்றுக் கொள்ளுந் திரிவுந் தவம் விற்றாங்
கூனோம்பும் வாழ்வு முரிமைவிற் றுண்பதூஉம்
தானோம்பிக் காத்த றலை.    
(61)

268.
இடைதெரிந் தச்சுறுத்து வஞ்சித் தெளியார் 
உடைமைகொண் டேமாப்பார் செல்வம் - மடநல்லார் 
பொம்மன் முலைபோற் பருத்திடினு மற்றவர் 
நுண்ணிடைபோற் றேய்ந்து விடும்.    
(62)

யுடைய புனங்களிலுள்ளனவான. பைங்கூழ் - பயிரை. புலியேறு பைங்கூழைத் தின்னாவாம்.

    “புலிபசித் தன்ன மெலிவி லுள்ளத், துரனுடை யாளர்” (புறநா. 190 : 10-11), “உடுக்கை யுலறி யுடம்பழிந்தக் கண்ணும், குடிப்பறப்பாளர்தய் கொள்கையிற் குன்றார், இடுக்கண் டலை வந்தக் கண்ணு மரிமா, கொடிப்புற் கறிக்கொமோ மற்று” (நாலடி, 141), “ஒற்கந்தா முற்ற விடத்து முயர்ந்தவர், நிற்பவே நின்ற நிலையின்மேல் - வற்பத்தால், பன்மேனிலியும் பசிபெரி தாயினும், புன்மேயா தாகும் புலி” (பழமொழி, 119) என்பன இதனோடு ஒப்பு நோக்கற்பாலன.

    267. பொருள் ஈட்டுதற்கண் விலக்கத்தக்கவை இவையென்பது கூறப்படும்.

    குலம் - குலவொழுக்கம். வெறுக்கை - செல்வம். வாய்மை நலம் - வாய்மையகிய நன்மையை. திரு - செல்வம். தவம் விற்று - தவத்தை அழித்து; ஊன் - உடம்பை; ஆகுபெயர். வாழ்வு - செல்வர். உரிமை - மனைவி; “உரிமைமுன் போக்கியல்லா லொளியுடை மன்னர் போகார்” (சீவக. 272.) தான் - ஒருவன். ஓம்பிக் காத்தல் - தம்பால் வாராதபடி குறிக்கொண்டு காத்தல். தலை - மிகச் சிறந்தது.

    வெறுக்கையையும் திருவையும் வாழ்வையும் உண்பதையும் ஓம்பிக் காத்தல் தலை. வறுமைநிலை அடையினும் குலம் முதலியவற்றைப் பாதுகாத்தல் வேண்டும்.

    268. வஞ்சனையால் ஈட்டும் பொருள் முடிவில் அழியெமென்பது கூறப்படும்.

    இடை - பிறர் சோர்வுற்ற சமயம்; இடை - சமயம்; “உடையோர் போல விடையின்று குறுகி” (புறநா. 54.) அச்சுறுத்து - அஞ்சுவித்து. (பி-ம்.) ‘அஞ்சுறுத்து’. எளியார் உடைமை கொண்டு - வலியரல்லாரது செல்வத்தைக் கொண்டு. ஏமாப்பார் - இன்புறுவாரது; ஏமாத்தல் - இன்புறுதல்; “காமர் நெஞ்சமேமாந் துவப்ப” (புறநா. 198 :8.) பொம்மல் - பருத்