பக்கம் எண் :

நீதி நெறி விளக்கம்205

269.
பெற்ற சிறுகப் பெறாத பெரிதுள்ளும்
சிற்றுயிர்க் காக்க மரிதம்மா - முற்றும்
வரவர வாய்மடுத்து வல்விராய் மாய
எரிதழன் மாயா திரா.    
(63)

270.
தத்த நிலைக்குங் குடிமைக்குந் தப்பாமே 
ஒத்த கடப்பாட்டிற் றாளூன்றி - எய்த்தும் 
அறங்கடையிற் செல்லார் பிறன்பொருளும் வெஃகார் 
புறங்கடைய தாகும் பொருள்.    
(64)

271.
பொதுமகளே போல்வ தலையாயார் செல்வம்    
குலமகளே யேனையோர் செல்வம் - கலனழிந்த    
கைம்மையார் பெண்மை நலம்போற் கடையாயார்    
செல்வம் பயன்படுவ தில்.    
(65)

்திடினும் தேய்ந்து விடும். புருத்திடினும் :உம்மை எதிர்மறை. முதற்கண் பெருகுவது போற்றோன்றினும் பின் அழிந்துவிடுமென்றபடி. “அழக் கொண்ட வெல்லா மழப்போ மிழப்பினும், பிற்பயக்கும் நற்பா லவை” (குறள், 659.)

    269. பேராசையின் குற்றம் கூறப்படும்.

    பெற்ற - தாம்பெற்ற பொருள்களை. சிறுக - சிறியனவாக. பெறாத - தாம் பெறாத பொருள்களை. பெரிதாக உள்ளும். சிற்றுயிர் - சில வாழ்நாளையுடைய உயிர்கள். அரிது - இல்லை. அம்மா : வியப்பிடைச்சொல். முற்றும் - முழுதும். வாய்மடுத்து - உண்டு. விராய் - விறகு. மாயாதிரா : அழியும் என்றபடி.

    தழல் அழிதல்போலப் பற்றுள்ளானொருவன் அதனோடு தானும் அழிவனெனெறபடி. தான் பெற்றவற்றையே பெரியனவாகக் கருதிச் சிந்தை நிறவைப் பெறாமல் பெற்றவை சிறியவாகவும் பெறாதன பெரியவாகவும் எண்ணி ஏங்குவானுக்கு என்றும் ஆக்கமில்லை யென்பது கருத்து.

    270. பொருளீட்டும் முறை கூறப்படும்.

    குடிமை - குடிப்பிறப்பு. ஒத்த கடப்பாட்டில் - நிலை குடிமை ஆகியவற்றோடு பொருந்திய கடமையில். தாள் ஊன்றி - முயற்சியை நாட்டி. எய்த்தும் - மனம் சோர்ந்தும். அறங்கடை - பாவம். அறங்கடையிற் செல்லராய்ப் பிறன் பொருளும் வெஃகாரது புறங்கடையிலுள்ளதாகும் பொருள். “ஆக்க மதர்வினாய்ச் செல்லு மசைவிலா, ஊக்க முடையா னுழை” (குறள், 594) என்பது இதனோடு ஒருவாறு ஒப்புமையுடையது.

    271. இது முதல் ஈகையின் சிறப்புக் கூறப்படும்.