272. | வள்ளன்மை யில்லாதான் செல்வத்தின் மற்றையோன் | | நல்குரவே போலு நனிநல்ல கொன்னே | | அருளில னன்பிலன் கண்ணறைய னென்று | | |
273. | ஈகை யரிதெனினு மினைசொலினு நல்கூர்தல் | | ஓஒ கொடிது கொடிதம்மா - நாகொன்று | | தீவினைக் கம்மியனால் வாய்ப்பூட் டிடப்படின்மற் | | |
தலையாயார் செல்வம் பொதுமகளே போல்வ; பலர்க்கும் பயன்படுதல்பற்றிப் பொதுமகளை உவமையாக்க் கூறினார். ஏனையோர் - இடையாயார்; தலையாயாரென்றும் கடையாயாரென்றும் தனித்தனி வகுத்தமையின் ஏனையோரென்றது பாரிசேடத்தால் இடையாயாருக்கு ஆயிற்று. ஏனையோர் செல்வம் குலமகளே போல்வ எனப் பின்னும் போல்வ வென்பதைக் கூட்டுக; தமக்கு மட்டும் பயன்படுதல் பற்றி இடையாயார் செல்வத்திற்குக் குலமகளை உவமையாக்கினார். கலன் - இங்கே சிறப்புப் பற்றி மங்கலநாணைக் குறிக்கும். ஒருவருக்கும் பயன்படாமை பற்றிக் கடையாயார் செல்வத்திற்குக் கைம்பெண்டிர் நலம் உவமையாயிற்று.
272. செல்வம் படைத்தும் ஈயாதாரது இழிவு இதிற் கூறப்படும்.
வள்ளன்மை - வரையாது கொடுக்கும் தன்மை. செல்வத்தின் - செல்வத்தைக் காட்டிலும். மற்றையோனென்றது வறியவனை. நலகுரவே நனி நல்ல போலும்; நனி - மிகவும். கொன்னே - ஒரு பயனுமின்றி. அருள் - தொடர்பில்லாதார் மேலும் செல்லும் நேயம்; அன்பு - தொடர்புடையார் மேற் செல்லும் நேயம். கண்ணறையன் - கண் அற்றவன்; கண்ணோட்ட மில்லாதவன்; காதறை, மூக்கறை போன்றது இது; அறை - அறுதல்.
பின்னிரண்டடிகள் நல்குரவு நல்லதென்பதற்குக் காரணம் கூறியபடி. வள்ளன்மையில்லாதான் அருளிலன் அன்பிலன் கண்ணறையனென்று இகழப்படுவான் என்பதை எதிர்மறை வாய்பாட்டால் உணர்த்தினார்.
273. ஈதல் இல்லையானாலும் இன்சொல்லேனும் வேண்டுமென்பது கூறப்படும்.
அரிதெனினும் : உம்மை இழிவு சிறப்பு. இன்சொலினும் நல்கூர்தல் - இன்சொற் கூறுதலிலும் வறியவராதல்; இன்சொல்லைக் கூறாதிருத்தல்; உம்மை இழிவு சிறப்பு. ஓஒ கொடிது; ஓகாரம் சிறப்புப் பொரொளது. (பி-ம்.) ‘ஓகோ’. கொடிது குடிது : அடுக்கு மிகுதிபற்றி வந்தது.
|