274. | சொல்வன்மை யுண்டெனிற் கொன்னே விடுத்தொழிதல் | | நல்வினை கோறலின் வேறல்ல - வல்லைத்தம் | | ஆக்கங் கெடுவ துளதெனினு மஞ்சுபவோ | | |
275. | சிறுமுயற்சி செய்தாங் குறுபயன் கொள்ளப் | | பெறுமெனிற் றாழ்வரோ தாழார் - அறனல்ல | | எண்மைய வாயினுங் கைவிட் டரிதெனினும் | | ஒண்மையிற் றீர்ந்தொழுக லார். |
நாகொன்று - நாவை வருத்தி. தீவினையாகிய கம்மயனால். வாய்ப்பூட்டு - வாயாற் பேசமுடியாதபடி போடப்படும் ஒரு கருவி. ஆவா : இரக்கக் குறிப்பு : இடைச்சொல்; “ஆவா விருவ ரறியா வடிதில்லை யம்பலத்து, மூவா யிரவர் வணங்கநின் றோனை” (திருச்சிற். 72.) இன்சொற் கூறாதானைக் குற்றத்தினின்று நீக்குவார் போல ஒரு காரணம் கூறினார்; ‘அவன்பாற் குற்றமில்லை அவன் செய்த தீவினைதான் அதற்குக் காரணம்’ என்றார்.
இச்செய்யுள் புகழ்வதுபோலப் பழித்தபடி. 274. சொல்வன்மை யுடையார் அதனைப் பயனின்றி விடுத்தல் கூடாதென்பது கூறப்படும்.
கொன்னே - அதனால் ஒரு பயனும் அடைதலின்றி. நல்வினை கோறலின் - நல்வினைகளை அழித்தலினின்றும். வேறு அல்ல - வேறுபாடுடையது அல்ல. நல்வினையை அழித்தலோடு ஒத்ததேயென்பது கருத்து. வல்லை - விரைவில். ஆக்கம் - செலவம். கெடுவதுளதெனினும் : உம்மை உயர்வு சிறப்பு. வாக்கின் பயன் கொள்பவர், ஆக்கம் கெடுவதுளதெனினும் அஞ்சுபவோ? அஞ்சமாட்டாமென்பது கருத்து.
தம் சொல்வன்மையினால். சந்தி செய்வித்தல் முதலிய நல்வினைகளை யாற்றும் ஆற்றலுடையவர் தம் ஆக்கம் இழப்பினும் அவற்றைச் செய்வர்.
275. ஆங்கு : அசைநிலை. உறு பயன் - மிக்க பயனை. கொள்ளப் பெறும் - கொள்ளக்கூடும். தாழ்வரோ - முயற்சி செய்யத் தாமதிப்பரோ. (பி-ம்.) ‘தாழ்ப்பரோ’. அறன் அல்ல - பாவச் செயல்கள். எண்மைய ஆயினும் - செய்தற்கு எளியன வாயினும். அரிது எனினும் - செய்தற்கு அரிதானாலும்; அரிது; சாதி ஒருமை. ஒண்மையின் தீர்ந்து ஒழுகலார் - அறச்செயல்களினின்றும் நீங்கி ஒழுகாத பெரியோர். ஒண்மையிற்றீர்ந் தொழுகலார் தாழ்வரோ என இயைக்க.
|