276. | செயக்கடவ வல்லனவுஞ் செய்துமன் னென்பார் | | நயத்தகு நாகரிக மென்னாம் - செயிர்த்துரைப்பின் | | நெஞ்சுநோ மென்று தலைதுமிப்பான் றண்ணளிபோல் | | எஞ்சா தெடுத்துரைக்கற் பாற்று. |
277. | அல்லன செய்யினு மாகுலங் கூழாக்கொண் | | டொல்லாதார் வாய்விட் டுலம்புப - வல்லார் | | பிறர்பிறர் செய்ப்போற் செய்தக்க செய்தாங் | | |
276. தம்மால் ஆகாதவற்றையும் செய்வதாகக் கூறுவாரது இழிவு கூறப்படும்.
செயக்கடவ அல்லனவும் - தம்மாற் செய்யக் கூடாதவற்றையும். மன் செய்தும் என்பார் - மிகவும் செய்து விதுமோ மென்பாருடைய நயத்தகு - விரும்பத்தக்க. நாகரிகம் - கண்ணோட்டம்; “பெயக்கண்டு நஞ்சுண்டமைவர் நயத்தக்க, நாகரிகம் வேண்டுபவர்” (குறள், 580,) நாகரிக மென்றது இங்கே குறிப்பு மொழி, கண்ணோட்டமின்மையைக் குறித்தலால். செயிர்த்து உரைப்பின் - பிறரைக் கோபித்து உரைத்தால். நெஞ்சுநோம் - கோபித்து உரைக்கப்பட்டவருடைய மனம் வருந்தும். தலைதுமிப்பான் தண்ணளி போல் - அவர் வருத்தப்படா திருத்தற் பொருட்டு அவர் தலையை வெட்டுபவனுடைய கொடுஞ்செயலைப் போல; தண்ணளி : குறிப்பு மொழி. எஞ்சாது - குறையாமல். எடுத்துரைக்கற்பாற்று - பலரறிய எடுத்துச் சொல்லும் பான்மையை யுடையது. செய்து மன்னென்பார் நாகரிகம் எடுத்துரைக்கற் பாற்றென இயைக்க.
கண்ணோட்டங் கருதித் தம்மாற் செயக்கடவ அல்லாதவற்றைச் செய்வதாக உறுதி கூறி இடர்ப்படுதல் பிழையென்பது கருத்து.
277. புல்லியார் ஆரவாரமும் நல்லோர் அறிமடமும் கூறப்படும்.
அல்லன செயினும் - தீய செயல்களைச் செய்தாலும். ஆகுலம் கூழாக் கொண்டு - ஆரவாரத்தையே பயனாக்க் கொண்டு. ஒல்லாதார் - வன்மையிலாதார். (பி-ம்.) ‘ஒல்காதார்’. உலம்புப - முழங்குவர். வல்லார் - ஒரு நல்வினையைச் செய்து முடிக்கும் ஆற்றலுடையார். பிறர் பிறர் செய்வபோல் - பிறர் செய்வன போல செய்தக்க செய்து - செய்யத்தக்க அறங்களைச் செய்து. அறிமடம் பூண்டு நிற்பார் - தாம் அறிந்திருந்துர் அறியாதார் போல இருப்பர்.
ஒல்லாதார் அல்லன செய்யினும் வாய்விட்டு உலம்புப; வல்லார் செய்யத்தக்க செய்து, அறிமடம் பூண்டு நிற்பார்.
|