278. | பகையின்று பல்லார் பழியெடுத் தோதி | | நகையொன்றே நன்பயனாக் கொள்வான் பயமின்று | | மெய்விதிர்ப்புக் காண்பான் கொடிறுடைத்துக் கொல்வான்போற் | | |
279. | தெய்வ முளதென்பார் தீய செயப்புகிற் | | றெய்வமே கண்ணின்று நின்றொறுக்கும் - தெய்வம் | | இலதென்பார்க் கில்லைத்த மின்புதல்வர்க் கன்றே | | |
280. | தீய செயற்செய்வா ராக்கம் பெருகினும் | | தீயன தீயனவே வேறல்ல - தீயன | | நல்லன வாகாவா நாவின் புறநக்கிக் | | |
278. பிறர் பழி கூறுவானது இழிவு கூறப்படும்.
பகையின்று - தனக்கு யாதொரு பகையும் இல்லாமலிருப்ப. நகை ஒன்றே - அதனால் தானடையும் மகிழ்ச்சி ஒன்றையே; நகைத்தல் ஒன்றையே எனலும் ஆம். பயமின்று - தான் கொள்ளும் பொருளாகிய பயனில்லையாகவும். மெய் விதிர்ப்புக் காண்பான் - வழிப்போவாரது உடல் துடித்தலைக் காணும் பொருட்டு. கொடிறு உடைத்துக் கொல்வான் போல் - கன்னத்தில் அடித்து வருத்தும் வேடன் அஞ்சப்படுவதுபோல்; “கொடிறுடைக்குங் கூன்கையர்” (குறள், 1077); “கடுங்கண் மறவர் தாம், கொள்ளும் பொருளில ராயினும் வம்பலர், துள்ளுநர்க் காண்மார் தொடர்ந்துயிர் வௌவலின்” (கலி. 4 : 3-5.) கைவிதிர்த்தலை அச்சக்குறிப்பு; “வினையது விளைவு காண்மி னென்றுகை விதிர்த்து நிறைபார்” (சீவக. 1108,) அஞ்சப்படும் - அஞ்சப்படுவான். பயனாக்கொள்வான் அஞ்சப்படுமென இயைக்க.
279. ‘கடவுள் உண்டென்பாருக்கே மிக்க துன்பங்கள் வாழ்க்கையில் உண்டாகின்றன’ என்று கூறுவாரை நோக்கி அதற்கொரு காரணம் எடுத்துரைப்பார்.
தீய - தீய செயல்களை. செயப்புகின் - செய்யத் தொடங்கினால்; புகின் என்பது அவர் தீய செயல்களைச் செய்யாமையே இயற்கை யென்பதை விளக்கி நின்றது. கண் இன்று - கண்ணோட்டமில்லாமல்; கண் - கண்ணோட்டம்: ஆகு பெயர்; இன்று - இன்றி. ஒறுக்கும் - தண்டிக்கும். இல்லை - யாதொரு தண்டனையும் இல்லை. இன்புதல்வர்க்கு அன்றே - தமக்குப் பல புதல்வரிருப்பினும் தம்பால் அன்புள்ள புதல்வருக்கு அல்லவா. பலகாலும் பயன் சொல்வார் - பலமுறையும் பயன்படுவனவற்றைப் பெற்றோர் கூறுவர்; இதனை மறக்கருணை என்பர்.
280. தீய செயல்களால் ஆக்கமுண்டாயினும் அவை நல்லனவாகா என்பது கூறப்படும்.
|