பக்கம் எண் :

நீதி நெறி விளக்கம்215

293.
சிற்றின்பஞ் சின்னீர தாயினு மஃதுற்றார் 
மற்றின்பம் யாவையுங் கைவிடுப் - முற்றுந்தாம் 
பேரின்ப மாக்கட லாடுவார் வீழ்பவோ 
பாரின்ப்ப் பாழ்ங்கும்பி யில்.    
(87)

294.
எவ்வினைய ரேனு மிணைவிழைச் சொன்றிலரேற்
றெவ்வுந் திசைநோக்கிக் கைதொழூஉம் - அவ்வினை
காத்த லிலரே லெனைத்துணைய ராயினும்
தூர்த்தருய் தூர்ப்பா ரலர்.    
(88)

295.
பரபரப்பி னோடே பலபல செய்தாங்
கிரவுபகல் பாழுக் கிறைப்ப - ஒருவாற்றான்
நல்லாற்றி மூக்கிற் பதறிக் குலைகுலைப
எவ்வாற்றா னுய்வா ரிவர்.    
(89)

“என்பெழுந் தியங்கும் யாக்கையர்” ( முருகு. 130.) புன்புலால் - புலாலுண்ணும் சாதியாரும் விரும்பாத புன்மையையுடைய ஊன்; “புலையனும்பவிரும் பாதவிப் புன்புலால் யாக்கை” ( அரிச்சந்திர. ) பொய்க்குடில் - உடம்பு. போதம் - ஞானம். அதனால் வேய்ந்த புக்கிலென்றது முத்தியை; “பரந்தாம்ப் புக்கில்” (637.) புக்கில் - எஞ்ஞான்றும் இருப்பதற்குரிய இல்லம் ( குறள், 340.) குடி புகுதுவார் ஓம்பிவரோ? ஓம்பாரென்றபடி “ஞானத்தால் வீடாக நாட்டு” ( சிறுபஞ்ச. 36) என்பவாகலின் போத்ததால் தாம் வேய்ந்த புக்கிலென்று வீட்டைக் கூறினார்.

    293. ஞானியர் உலக இன்பத்தை விரும்பா ரென்பர்.

    சின்னீரது - சிறிது காலமே நிற்கும் இயல்பினது (208.) முற்றும் - காலமுழுதும். கும்பி - சேறு. கடலில் ஆடுவார் கும்பியல் வீழாரென்றது ஒரு நயம்.

    294.தவவிரதம் பூண்டார் மகளிர் இன்பத்தை விழையாரென்பர்.

    வினை - தவச்செயல். இணை விழைச்சு - புணர்ச்சி. (பி-ம்.) ‘ஒன்றில்லெனில்’. தெவ்வும் - பகைஞரும். அவ்வினை - அந்த இணை விழைச்சை. தூர்த்தரும் - காம நுகர்ச்சியில் மீதூர்ந்தவர்களும். அலர் தூர்ப்பார் - பழிமொழிகளைக் கூறுவார்.

    295. பரபரப்பு - மிக்க விரைவு. பாழுக்கு இறைப்ப - பாழ் நிலத்திற்கு நீர் இறைப்பார்கள்; என்றது பயனற்ற செயல்களைச் செய்வார்கள் என்றபடி; “ஏழைத் தொழும்பனே னெத்தனையோ காலமெல்லாம், பாழுக்கிறைத்தேன்” ( திருவா. தோணோக். 13). ஒருவாற்றான் - ஒருவகையால். நல் ஆற்றின் ஊக்கின் - நல் வழியே செல்லும் வண்ணம் ஊக்கத்தை உண்டாக்கினால். பதறிக் குலைகுலைப - அவ்வழியிற் செல்லுதற்கு அஞ்சி நடுங்குவார்.