பக்கம் எண் :

214குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

291.
துயிற்சுவையுந் தூநல்லார் தோட்சுவையு மெல்லாம்
அயிற்சுவையி னாகுஎவென் றெண்ணி - அயிற்சுவையும்
பித்துணாக் கொள்பபோற்கொள்ப பிறர்சிலர்போல்
மொத்துணா மொய்ம்பி னவர்.    
(85)

292.
அன்பொ டருளுடைய ரேனு முயிர்நிலைமற்  
றென்பியக்கங் கண்டும் புறந்தரார் - புன்புலாற்  
பொய்க்குடி லோம்புவரோ போத்ததாற் றாமவேய்ந்த
புக்கில் குடிபுகுது வார்.    
(86)

பண் - பாலைப்பண் முதலியன. மகளிர் பாடும் பண்ணையும் பாடலையும் செவிமடார்; செவிமடார் - கேளார். துறவிகள் இசையை விரும்பிக் கேளாரென்பது, “மடந்தையர் மொழியுங் கானமுங் கேட்டு மன்னவன் மகண்முலை மணந்தான், கடந்திர் கலையின் கோடுபெற் றுயர்ந்த கருதருந்தவனெனல் கேட்டும், படர்ந்திள மறிமான் வேட்டுவன் பாடும் பண்செவி மடுத்தவன் வலைமேல், கிடந்தன கண்டும் வெவ்விசை கேளேன்” (பாகவதம், 11 : ஆசிரியரை யுரைத்த. 15) என்னும் செய்யுளால் விளங்கும் தாம் அஞ்சித் துறந்த காமத்தைப் பண்ணும் பாட்டும் மிகுவிக்குமாதலின் பண்ணொடு பாடல் செவிமடாரென்றார்; “கிளைநரம் பிசையுங் கூத்துங் கேழ்ந்தெடுந் தீன்ற காம, விளைபயன்” (சீவக. 2598) என்பதனாலும் இஃது அறியப்படும். வீடு இல் - விடுதல் இல்லாத; வீடு - விடுதல்; “வீடில் பட்டினம்” (சீவக. 38, ந.)

    291. தவஞ்செய்வார்க்குரிய விரதங்களுள் உண்டி சுருக்கலொன்றென்பது இதிற் கூறப்படும்.

    துயிற்சுவை - தூக்கத்தின் இன்பமு. தூ நல்லார் தோட்சுவைநென்றது காம இன்பத்தை. அயிற் சுவையும் - உணவின் சுவையையும். பித்து உணாக்கொள்ப போல் - பித்துடையவர் சுவையை அறிசாமல் உணவு கொள்ளுதலைப்போல. பிறராகிய சிலரைப் போல. மொத்துணா மொய்ம் பினவர் - புலன்களால் துன்ப்படாத வன்மையுடையவர்.

    பேருண்டி, துயில் காமம் முதலிய தாமத உணர்ச்சிகளை உண்டாக்குவதாதலின் துறவியர் அதனை விரும்பாரென்றபடி.

    மொய்ம்பினவர் கொள்ப வென்க.

    292. துறவொழுக்கம் பூண்டார் தம் உடலைப் பாதுகாப்பதிற் கருத்துக் கொள்ளா ரென்பர்.

    உயிர்நிலை - உடம்பு; உயிர் நிற்றற் கிடனாதலின் இங்ஙனம் கூறினார். (குறள், 290.) என்பு இயக்கம் - எலும்பு வெளியே தோன்றி அசைதல்;