288. | கற்பின் மகளி னலம்விற் றுணவுகொளும் | | பொற்றொடி நல்லார் நனிநல்லர் - மற்றுத்தம் | | கேள்வற்கு மேதிலர்க்குந் தங்கட்குந் தங்கிளைஞர் | | |
289. | முறையுங் குடிமையும் பான்மையு நோக்கார் | | நிறையு நெடுநாணும் பேணார் - பிறிதுமொரு | | பெற்றிமை பேதைமைக் குண்டே பெரும்பாவம் | | |
290. | பெண்மை வியவார் பெயரு மெடுத்தோதார் | | கண்ணோடு நெஞ்சுறைப்ப நோக்குறார் - பண்ணொடு | | பாடல் செவிமடார் பண்பல்ல பாராட்டார் | | |
யான், இசை வல்லான், நோக்கத்தான், இன்சொல்லான் எனினும் என்க. மாதர்க்கு - மகளிர்க்கு. மனம் அயலார்மேல் ஆகும்,
288. இதுமுதல் இரண்டு பாட்டுக்களால் கற்பில்லாத குலமகளிரது இழிவு கூறப்படும்.
கற்பில் மகளின் - கற்பில்லாத குலமகளைக் காட்டிலும். நலத்தை விற்று. பொற்றொடி நல்லார்; வரைவின் மகளிர். அவர் நல்லராதற்குக் காரணம் பின்னிரண்டடிகளிற் கூறப்படும். கேள்வன் - கணவன். ஏதிலர் - அயலார். கிளைஞர் - சுற்றத்தார். கேடு - பழி பாவம் முதலியன.
289. குடிமை - குடிப்பிறப்ப்; “பெண்ணெனப் படுவ கேண்மோ பீடில பிறப்பு நோக்கா” (சீவக. 1597.) பான்மை - வருணத்தின் தன்மை. பால் - வருணம்; “வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளும்” (புறநா. 183 : 8) நிறை - மனத்தைக் கற்பு நெறியில் நிறுத்துதல். நெடுநாண் - நெடுங்காலமாக உள்ள நாணம்; “நாணோ டுடன்பிறந்த நான்” (முத். 98), “என்னொடும் வளர்ந்த, பொற்பார் திருநாண்” (திருச்சிற். 208) என்று கூறப்படுதல் காண்க. பேதைமைக்குப் பிறிதும் ஒரு பெற்றிமையுண்டோ. பெற்றிமை - தன்மை; என்றது, “நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும், பேணாமை பேதை தொழில்” (குறள், 833) என்பதை நினைந்து கூறியது.
கற்பில்லாத மகளிர் பிறப்பு, பெரும்பாவம் என்க.
290. இதுமுதல் 18-செய்யுட்களால் துறவறத்தின் இலக்கணம் கூறப்படும்.
துறவறத்தார்க்கு ஆகாத சில செயல்கள் இச்செய்யுளில் கூறப்படும்.
பெண்மை வியவார் - பெண் தன்மையை வியந்து பேசார். அவர் பெயர்களையும் எடுத்துச் சொல்வார். நெஞ்சுறைப்ப - நெஞ்சு அழுந்த.
|