பக்கம் எண் :

212குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

285.
திருவினு நல்லாண் மனைக்கிழத்தி யேனும் 
பிறன்மனைக்கே பீடழிந்து நிற்பர் - நறுவிய 
வாயின வேனு முமிழ்ந்து கடுத்தின்னும் 
தீய விலங்கிற் சிலர்.     
(79)

286.
கற்புடுத் தன்பு முடித்துநாண் மெய்ப்பூசி
நற்குண நற்செய்கை பூண்டாட்கு - மக்கட்பே
றென்பதோ ராக்கமு முண்டாயி னில்லன்றே
கொண்டாற்குச் செய்தவம் வேறு.    
(80)

287.
ஏந்தெழின் மிக்கா னிளையா னிசைவல்லான்
காந்தையர் கண்கவர் நோக்கத்தான் - வாய்ந்த
நயனுடை யின்சொல்லான் கேளெனினு மாதர்க்
கயலார்மே லாகு மனம்.    
(81)

    285. மனைக்கிழத்தி திருவினும் நல்லாளேனும் - தம் மனைவி திருமகளைக் காட்டிலும் அழகில் மிக்கவளாயினும். பீடு அழிந்து - பெருமை கெட்டு. நறுவிய வாயினவேனும் - நல்ல சுவையுடைய இரைகள் வாயின்கண் உள்ளனவாயினும். கடு - கடுக்காய் போன்ற கைப்புச் சுவையுடையவற்றை; “வேம்புய் கடுவுந் தீம்பிழி யாக” (699); “வேம்புங் கடுவும் போல வெஞ்சொற், றாங்குதலின்றி” (தொல். செய். 112.) விளங்கின் - விங்ங்குகள்ப் போல. சிலர், விலங்கின், பிறன்மனைக்கே பீடழிந்து நிற்பார். “வம்பிலாங் கூந்தன் மனைவியைத் துறந்து பிறர்பொரு டாரமென்றிவற்றை, நம்பினார்” (பெரிய திரு. 1.6 : 4) என்பதையும் அதன் வியாக்கியானத்தையும் பார்க்க.

    286. நன்மக்கட்பேற்றின் சிறப்புக் கூறப்படும்.

    கற்புடுத்து - கற்பாகிய ஆடையை உடுத்து; “மணிபொன்னும் சாந்தமும் மாலையு மின்ன, அணியெல்லா மாடையின் பின்” (பழமொழி, 271) என்பராதலின் கற்பை முதலில் ஆடையாக்கிக் கூறினார். அன்பு முடித்து - அன்பாகிய மலரைச் சூடி. நாண் மெய்ப்பூசி - நாணமாகிய சந்தனத்தை மெய்யின்கண் பூசி. பூண்டாட்கு என்றமையால் நற்குண நற்செய்கைகள் அணிகளெனக் கொள்க. ஆக்கம் - செல்வம். கொண்டாற்கு - கணவனுக்கு. செய்தவம் வேறு இல்லன்றே.

    287. எழில் - எழுச்சி; வளர்ந்தமைந்த பருவத்தும் வளர்ந்து மாறியதன்றி இன்னும் வளருமென்பது போன்று காட்டும் அழகு (தொல். பொருளியல், 53, ந.) இசையில் வல்லவன். காந்தையர் - பிறமகளிருடைய; காந்தையரென்பது மகளிரென்னும் பொதுப்பொருளில் நின்றது. நோக்கம் - பார்வை. நயன் உடை இன்சொல்லான் - அன்புள்ள இன்சொற்களையுடையவன். கேள் - கணவன்; எழுவாய். கேள் எழில் மிக்கான், இளை