பக்கம் எண் :

நீதி நெறி விளக்கம்211

283.
கருமஞ் சிதையாமே கல்வி கெடாமே
தருமமுந் தாழ்வு படாமே - பெரிதுந்தம்
இன்னலமுங் குன்றாமே யேரிளங் கொம்பன்னார்
நன்னலந் துய்த்த னலம்.    
(77)

284.
கொலையஞ்சார் பொய்ந்நாணார் மானமு மோம்பார் 
களவொன்றோ வேனையவுஞ் செய்வார் - பழியோடு 
பாவமிஃதென்னார் பிறிதுமற் றென்செய்யார் 
காமங் கடுவபட் தார்.    
(78)

சென்று நிற்றலை. சிறுவரையும் - சிறிது பொழுதாயினும். நல் நலத்தது - நல்ல இன்பத்தைத் தருவது. நலம் அன்று - இன்பம் அன்று. அது மெய்ந் நடுங்க மனம் நடுங்க வருவதோரு நோயாகும்.

    பிறர் மனை நயப்பவர் அறமல்லாத்தைச் செய்தவராவதோடு எப்போதும் அச்சத்தை அடைதலால் தாம் கருதிய இன்பமும் பெறாதவராவரென்பது கருத்து.

    “புக்க விடத்தச்சம் போதரும் போதச்சம், துய்க்கு மிடத் தச்சந் தோன்றாமைக் காப்பச்சம், எக்காலு மச்சந் தருமா லெவன் கொலோ, உட்கான் பிறனில் புகல்”, “காணிற் குடிப்பழியாங் கையுறிற் கால்குறையும், மாணின்மை செய்யுமா லச்சமா - நீணிரயத் துன்பமு, பயகுமாற்றுச்சாரி நீகண்ட, இன்ப மெனக்கெனைத்தாற் கூறு” (நாலடி, 83-4) என்பன இங்கே ஒப்பு நோக்கற்பாலன.

    283. சிதையாமே - அழியாதபடி. இல் நலமும் - இல் வாழ்க்கையின் நன்மையும். குன்றாமே - குறையாதபடி. ஏர் - அழகையுடைய. கொம்பன்னாரது நலந் துய்த்தல் நலம்; துய்த்தல் - அனுபவித்தல் சிதையாமே, கெடாமே, தாழ்வுதடாமே, குன்றாமே என்னும் எதிர்மறையெச்சங்கள அடுக்கித் துய்த்தல் என்னும் தொழிற்பெயரோடு முடிந்தன.

    284. காமத்தின் தீமை இதிற் கூறப்படும்.

    கொலை செய்தற்கு அஞ்சார். பொய் கூறுதற்கு நாணார் மானமும்: உம்மை உயர்வு சிறப்பு, மானம் உயிரினும் சிறந்ததாதலின். களவொன்றோ: களவு மட்டுமா செய்வாரென்றபடி; ஒன்றோ: எண்ணிடைச் சொல்; “அறனொன்றோ வான்றவொழுக்கு” (குறள், 148.) பழிபாவம் என்னார். “பகைபாவமச்சம் பழியென நான்கும், இகவாவா மில்லிறப்பான் கண்” (குறள், 146.) பிறிதென் செய்யார். மற்று : அசைநிலை. காமங்கதுவப்பட்டார் - காமத்தால் பற்றப்பட்டவர்: எழுவாய். காமங்கடுவப்பட்டார் அஞ்சார், நாணார், ஓம்பார், செய்வார், என்னார் என் செய்யார்.