பக்கம் எண் :

நீதி நெறி விளக்கம்217

298.
நெஞ்சு புறம்பாத் துறந்தார் தவப்போர்வை  
கஞ்சுக மன்று பிறிதொன்றே - கஞ்சுகம்  
எப்புலமுங் காவாமே மெய்ப்புலங் காக்குமற்  
றிப்புலய் காவா திது.        
(92)

299.
வஞ்சித் தொழுகு மதியிலிகாள் யாவரையும்
வஞ்சித்தே மென்று மகிழன்மின் - வஞ்சித்த
எங்கு முளனொருவன் காணுங்கொ லென்றஞ்சி
அங்கங் குலைவ தறிவு.    
(93)

300.
மறைவழிப் பட்ட பழிமொழி தெய்வம்
பறையறைந்தாங் கோடிப் பரக்குங் கழிமுடைப்
புன்புலா னாற்றம் புறம்பொதிந்து மூடினும்
சென்றுதைக்குஞ் சேயார் முகத்து.    
(94)

    ஆறலைத் துணாபார் செலவு பிழைத்துய்ப்பபோல், அல்லன நோனாமே அல்லவற்றிற் கொண்டுய்க்கு மென்க.

    தவமுந் தவமுடையார்க் காகும்” (குறள், 262) என்பதன் பொருளைத் தழுவு வந்தது இது.

    298. உள்ளத் துறவின் சிறப்புக் கூறப்படும்.

    நெஞ்சு புறம்பா - நெஞ்சு தம் வயப்படாமல் அயலதாக இருப்ப. தவப்பொர்வை - தவ்வேடமாகிய போர்வை; தம்மைப் பிறர் ஐயப்படா திருத்தற் பொருட்டுக் கொண்டதாதலின் அதனைத் தவப்பொர்வை யென்றார்; அதனை, “வலியி னிலைமையான் வல்லுருவம” (குறள், 273) எனத் திருவள்ளுவரும் கூறுதல் காண்க. கஞ்சுகம் - சட்டை. எப்புலமும் காவாமே - எந்தப் பொறிகளின் தொழிலையும் பாதுகாவாமல். மெய்ப்புலம் - மெய்யாகிய இடத்தை. இப்புல மென்றது உடம்பை; இப்புலமும்: உம்மை இழிவு சிறப்பு. ஏனைய கஞ்சுகம், பனி மழை முதலியவற்றினின்றும் உடம்பையேனும் பாதுகாக்கும்; தவப்போர்வை அதனையும் காவா தென்பது கருத்து. “நெஞ்சிற் றுறவார் துறந்தார்போல் வஞ்சித்து, வாழ்வாரின் வன்கணாரில்” (குறள், 276) என்பது இங்கே அறிதற்பாலது.

    299. வஞ்சித்து - பிறருக்கு வஞ்சனை செய்து. மதியிலிகாள்: விளி. வஞ்சித்த - பிறரை வஞ்சித்த செயல்களை. எங்கும் உளனொருவன் - கடவுள். காணுங்கொல்: கொல், அசைநிலை. அங்கம் குலைவது அறிவு - அச்சத்தால் உடம்பு நடுங்குதல் அறிவுடைமையாகும். “காணா, ரெனச் செய்யார் மாணா வினை” (பழமொழி, 102).

    300. மறைவழிப் பட்ட பழிமொழி - மறைவான இடத்தின் கண் உண்டான பழிச்சொல். பறையறைந்தாங்கு - பறையறைந்தாற்போல.