பக்கம் எண் :

218குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

301.
மெலியார் விழினு மொருவாற்றா னுய்ப
வலியார்மற் பொன்றானு முய்யார் - நிலைதப்பி
நொய்ய சழக்கென வீழாவாம் வீழினும்
உய்யுமா லுய்யா பிற.    
(95)

302.
இசையாத போலினு மேலையோர் செய்கை
வசையாகா மற்றையோர்க் கல்லாற் - பசுவேட்டுத்
தீயோம்பி வான்வழக்கங் காண்பாரை யொப்பவே
ஊனோம்பி யூன்றின் பவர்.    
(96)

303.
எவரெவ ரெத்திறத்த ரத்திறத்த ராய்நின்  
றவரவர்க் காவன கூறி - எவரெவர்க்கும்  
உப்பாலாய் நிற்பமற் றெம்முடையார் தம்முடையான்  
எப்பாலு நிற்ப தென.        
(97)

     (பி-ம்.) ‘பரம்பும்’. புன்புலால கழிமுடை நாற்றம் - ஊனினது மிக்க நாற்றம். சென்று உதைக்கும்; சென்று தைக்கும் என்பதும் பொருந்தும்.

    இஃது எடுத்துக்காட்டுவமையணி.

    301. மெலியார் - அறிவின் மெலிந்தவர். உய்ப - தப்புவார். ஒன்றானும் - ஒரு வழியினாலேனும். (பி-ம்.) ‘நிலைதப’. நொய்ய - கனத்திற் குறைந்தவை. சழக்கென - விரைவில். பிற உய்யா; பிற - கனமுள்ளவை.

    வலியார் தம் நிலையினின்றும் பிறழின் மீட்டும் அந்நிலையை அடைதல் அரிதென்றபடி; “இந்திர்ர் புகழுந் தொல்சீ ரில்லறம் புரிந்து ளோர்க்குத், தந்தம வொழுக்கந் தன்னிற் றகுமுறை தவறிற் றேனும், சிந்திடுந் தீர்வு முண்டாற் செய்தவர்க் கனைய சேரி, னுய்ந்திட லரிதால் வெற்பி னுச்சியிற் றவற லொப்ப” (கந்த. மார்க்கண்டேயப். 40.)

    302. இசையாத போலினும் - பொருந்திதனவற்றைப் போலத் தோற்றினும். மேலையோர் - மேன்மக்கள். மற்றையோர்க்கு அல்லால் - கீழ் மக்கள் திறத்தன்றி. ஒரு செயலே, செய்வார் தகுதிபற்றி வேறுபடும். பசு - யாகப் பசு. தீ ஓம்பி - ஓமாக்கினியைப் பாதுகாத்து; வேள்வி முடித்து என்றபடி. வான் வழக்கம் காண்பார் - மழை பெய்தலைக் காண்பவர். ஒப்பவே - ஒப்பார்களா? ஊன் ஓம்பி - தம் உடம்பைப் பாதுகாத்து. ஊனுண்டலின் இழிவைப் புலப்படுத்த ஊன் தின்பவரென்றார், “சாவமுன் னாட்டக்கன் வேள்வித் தகர்தின்று” (திருவா. திருச்சதகம், 4) என்பது போல.

    வேள்வி செய்வார் ஊனை உட்கொண்டாலும், அது செய்வார் தகுதி பற்றியும் கருத்துப் பற்றியும் வான் வழங்க்க் காணும் பயன்பற்றியும் இழிவாகா தென்றபடி.

    303. ஞானாசிரியர் இயல்பு கூறப்படும்.