பக்கம் எண் :

நீதி நெறி விளக்கம்219

304.
மெய்யுணர்ந்தார் பொய்ம்மேற் புலம்போக்கார் மெய்யுணர்ச்சி
கைவருதல் கண்ணாப் புலங்காப்பார் - மெய்யுணர்ந்தார்
காப்பே நிலையாப் பழிநாண னீள்பதவாச்
சேப்பார் நிறைத்தாழ் செறித்து.    
(98)

305.
கற்றுத் துறைபோய காதலற்குக் கற்பினாள்      
பெற்றுக் கொடுத்த தலைமகன்போல் - முற்றத்      
துறந்தார்க்கு மெய்யுணர்விற் றோன்றுவதே யின்பம்      
இறந்தவெலாந் துன்பமலா தில்.    
(99)

    எவர் எவர் எத்திறத்தர் - தம் மாணாக்கர்களுள் எவர் எவர் எந்த எந்த நிலையினரோ. (பி-ம்.) ‘அவரவருக்கு’. உப்பாலாய் - மேற்பட்டவராய். எம்முடையார் - ஆசிரியர். தம்முடையான் - பரம்பொருள். எப்பாலும் நிற்பது என - தான் எல்லாவற்றிற்கும் அப்பாலானாயினும் எவ்விடத்தும் கலந்து நிற்றலைப் போல. தம்முடையான் நிற்பதென நிற்பவென்க.

    304. மெய்யுணர்ந்தார் - ஞானியர். பொய்ம்மேல் - நிலையாத பொருள்களின்மேல். புலம் - பொறிகளை. மெய் உணர்ச்சி - த்ததுவ ஞானம். கை வருதல் கண்ணா - பெறுதலே கருத்தாக. புலம் காப்பார் - பொறிகளைத் தீய வழிகளிற் செல்லாதபடி தடுப்பார். மீட்டும் வந்த மெய்யுணர்ந்தாரென்பது சுட்டுப் பொருளது; எழுவாய். காப்பே - பொறிகளைக் காத்தலே. பழிக்கு நாணுதல் கதவாக. (பி-ம்.) ‘பழிநாணம்’. சேப்பார் - தங்குவர். நிறைத்ததாழ் செறித்து - மனத்தை ஒரு வழியில் நிறுத்துதலாகிய தாழக்கோலைச் சேர்த்து. நிறைத்தாழ் செறித்துச் சேப்பா ரென்க. (பி-ம்.) ‘சேர்ப்பார்’, ‘நிறைத்தாள்’. நிறையின் சிறப்புப் பற்றிக் கதவுக்கு வலியாகிய தாழாக உருவகப்படுத்தினார்; “காழொன்றுயர்திண் பதவு வலியுடைத்தோ, தாழொன் றிலதாயிற் றான்” (நன்னெறி, 32.) நிறைத்தாழ்: (பெருங். 1.33:150)

    பின்னிரண்டடிகள் உருவகவணி.

    305. மெய்யுர்வால் வரும் இன்பச் சிறப்புக் கூறப்படும்.

    துறைபோய - கல்வித்துறையில் முடிவுபோன - கற்பினாள் - கற்புடைய மனைவி முற்றத் துறந்தார்க்கு - அகப்பற்று புறப்பற்றுக்களை ஒருங்கே துறந்தார்க்கு. மெய்யுணர்வில் தோன்றுவதே - மெய்ஞ்ஞானத்தில் தோன்றும் இன்பமே. இறந்த எலாம் - அஃதொழிந்த மற்றைய எல்லா இன்பங்களும்.