306. | கற்றாற் கறிந்தடங்கித் தீதொரீஇ நன்றாற்றிப் | | பெற்றது கொண்டு மனந்திருத்துப் - பற்றுவதே | | பற்றுவதே பற்றிப் பணியறநின் றொன்றுணர்ந்து | | நிற்பாரே நீணெறிச்சென் றார். |
307. | ஐயந் திரிபின் றளந்துத் தியிற்றெளிந்து | | மெய்யுணர்ச்சிக் கண்விழிப்பத் தூங்கூவார் தம்முளே | | காண்பதே காட்சி கனவு நனவாகப் | | |
நீதிநெறி விளக்கம் முற்றிற்று.
306. வீடு பெற முயல்வார் தன்மை கூறப்படும். கற்றாங்கு - நூல்களிற் படித்தவாறே. அடக்கம் கல்வியின் பயனாகும்: “கற்றறிந்தார் கண்ட தடக்கம்” (பழமொழி, 243.) தீது ஒரீஇ - தீய செயல்களை விலக்கி. தீதொரீஇ நன்றாற்றியென்றது, “விலக்கிய வோம்பி விதித்தனவே செய்யும்” (223) என்பதை வற்புறுத்தியபடி. பற்றுவதே - எல்லாரும் பற்றுவதாகிய பரம்பொருளை. பற்றுவதே பற்றுவதே யென்னும் அடுக்கு, “பொய்யாமை பொய்யாமை யாற்றின்” (குறள். 297) என்றதுபோல் நின்றது. பணியற நின்று - எல்லாச் செயலும் அடங்கும்படி நின்று: “என்னுடைய, செயன்மாண்ட வாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ” (திருவா.) ஒன்று : பரம்பொருள்.
307. ஐயம் - அதுவோ இதுவோ என ஒன்றில் துணிவு பிறவாது நிற்கும் உணர்ச்சி. திரிபு ஒன்றை மற்றொன்றாகத் துணிதல். அளந்து - காட்சி முதலிய பிரமாணங்களால் அளந்து. உத்திகளால் தெளிந்து; உத்தி - யுக்தி. மெய்யுணர்ச்சிக்்கண்விழிப்ப - சத்திய ஞானமாகிய கண் விழித்திருப்ப. தூங்குவார் - உலக நுகர்ச்சியை அறியாதிருப்பவர்; “விழித்துறங்குத் தொண்டர்” (76) என்றார் முன்னும். தீர்ந்த பொருள் - முடிந்த பொருளாகும்.
|