திருவாரூர் நான்மணி மாலை
வெண்பா 308. | நாடுங் கமலேசர் நான்மணிமா லைக்குமிகப் | | பாடுங் கவிதைநலம் பாலிக்கும் - வீடொன்ற | | முப்போ தகத்தின் முயல்வோர்க்கு முன்னிற்கும் | | |
நேரிசை வெண்பா 309. | நீரூர்ந்த முந்நீர் நிலவலய நீள்கொடிஞ்சித் | | தேரூர்ந்த செல்வத் தியாகனே - ஆரூர | | வீதிவிடங் காவடங்கா வேலைவிடம் போலுமதிப் | | பாதிவிடங் காகடைக்கண் பார்த்து. |
308. கமலேசர் - தியாகேசர்; கமலை - திருவாரூர். கவித் - செய்யுள்; “மாசில் பனுவற் புலவர் புகழ்பல, நாவிற் புனைந்த நன்கவிதை” (பரி. 6 ; 7-8); “வினையொழிய வேராச, காரியஞ் ஞெய்யுங் கவிதையே” (தமிழ்விடு.) நலம் - சொல்லினிமை பொருளினிமையாகிய அழகுகள். ஒன்ற - அடையும் பொருட்டு. முப்போது - மூன்று காலங்களிலும்; முற்றும்மை தொக்கது. அகத்தின் முயல்வோர்க்கு - தியானிப்பவர்க்கு. கைப்போதகம் - துதிக்கையையுடைய யானை; என்றது விநாயக்க் கடவுளை.
கழல் பாலிக்கு மென்க.
309. தலைவி கூற்று. தோழி கூற்றுமாம். முந்நீர் நிலவலயம் - கடல் சூழ்ந்த பூமியாகிய வட்டம். நிலவலயமாகிய தேர், நீள் கொடிஞ்சித்தேரென்க; “ஆழித்தேர் வித்தகனை யான்கண்ட தாரூரே” (தே.) என இத்தலத்தின் தேர் சிறப்பிக்கப் பெறுமாதலின், முதலில் ‘தேரூர்ந்த செல்வத் தியாகனே’ என்றாள். தியாகேசர் திருத்தேரில் எழுந்தருளும்போது அடிக்கு ஓராயிரம் பொன் இறைக்கப்படுமாதலின் செல்வத் தியாகனென்றாள். வீதிவிடங்கர் : திருவாரூர்த் தியாகேசருடைய திருநாம்ம்; ஸப்த விடங்கர்களில் இவர் ஒருவர். திருப்பாறாயிலில் ஆதி விடங்கரென்றும், திருக்கோளிலியில் அவனிவிடங்கரென்றும், திருமறைக்
|