கட்டளைக் கலித்துறை 310. | பார்பெற்ற வல்லிக்குப் பாகீ ரதிக்குமெய்ப் பாதியுமத் | | தார்பெற்ற வேணியுந் தந்தார் தியாகர் தடம்புயத்தின் | | சீர்பெற்றிலேமென்று நாணால் வசங்கிச் சிலையெனவும் | | பேர்பெற்ற தாற்பொன் மலைகுனித் தாரெம் பிரானென்பரே. |
அறுசீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம் 311. | என்பாக நகுதலையோ டெழிலாக | | வணிந்தகம் லேச மற்றுன் | | றன்பாக மிடப்பாகத் தலைவிகரு | | விழிதோய்ந்துந் தலைவி பாகத் |
காட்டிற்புவனி விடங்கரென்றும், திருவாய்மூரில் நீல விடங்கரென்றும், திருநள்ளாற்றில் நகர விடங்கரென்றும், திருவாரூரித் வீதி விடங்கரென்றும், திருநாகைக்காரோணத்தில் அழகவிடங்கரென்றும் தியாகராச மூர்த்திகளுக்குத் திருநாமங்கள் உள்ளன. அடங்கா வேலை விடம் - தன் கொடுந்தன்மை அடங்காத சமுத்திரத்தில் எழுந்த நஞ்சை. மதிப்பாதி - அரைச் சந்திரன். சந்திரனுக்கு விடம் உவமை. மதிப்பாதியாகிய விடத்தினின்றும் பாதுகாப்பாயாக.
கடைக்கண் பார்த்துக் காவென்க.
310. பார்பெற்ற வல்லி - உமாதேவியார். பாகீரதிக்கு - கங்கைக்கு. வல்லிக்கு மெய்ப்பாதியும், பாகீரதிக்கு வேணியும் தந்தார்; நிரனிறை; 155-ஆம் செய்யுள் பார்க்க. புயத்தின் சீர் - திருத்தோளின் அழகை. நாணால் வணங்கி - நாண்கயிற்றால் வளைந்து. நாணத்தால் தலைகுனிந்து சிலை - வில், கல். பொன்மலை - மேரு குனித்தார் - வளைத்தார்.
மேருமலை நாண்கயிற்றால் வளைந்து வில்லான செய்தியைச் சிவபெருமான் திருத்தோளழகைத் தான் பெறாமையின் நாணத்தால் தலைவளைந்து பொன்னென்னும் நிலைமாறிக் கல்லென்னும் பெயரையும் பெற்றதென்று தோற்றும்படி உரைத்தார். இது சிலேடையோடு வந்த தற்குறிப்பேற்றவணி.
“வரைகுழைக்கு முலைகுழைப்பக் குழைதிரடோ ளழகின்முடி வணங்கி யென்னக். கரைகுழைக்கு மலைகுழைத்த கண்ணுதற்கு” (672) என்னும் இந்நூலாசிரியர் வாக்கும், “உன்மலை வார்முலை நல்லேர் கவர்ந்த துதவுதற்குப், பொன்மலை நாணொண் கழுத்தொடு தாளுறப் பூட்டி வெங்கை, மன்மலை மாதுமை பங்காளன் முன்னம் வளைத்ததன்றி, வின்மலை யாக்குத லென்மிளிர் வேற்கண் விளங்கிழையே” (வெங்கைக் கோவை, 12) என்பதும் இதனோடு ஒருவாறு ஒப்பு நோக்கற்பாலன.
311. அர்த்தநாரீசுவரத் திருவுருவத்தை நினைந்து ஆசிரியர் கூறியது இது.
|