பக்கம் எண் :

திருவாடுரூர் நான்மணி மாலை223

தன்பாக நின்றிருநோக் கலைதோய்ந்துக்
   திருநிறம்பவே றாகை யாலப்
பொன்பாக மிதுவெனவு நின்பாக
   மிதுவெனவும் புகலொ ணாதே.        
(4)

நேரிசை யாசிரியப்பா
312.
ஒண்கதிர் பரப்புஞ் செங்கதிர்க் கடவுள்
வெயில்கண் டறியா வீங்கிருட் பிழம்பிற்
புயல்கண் படுக்கும் பூந்தண் பொதும்பிற்
காவலர்ப் பயந்து பாதபத் தொதுங்கிய
5
இருவே றுருவிற் கருவிரன் மந்தி
பொன்னிறம் பழுத்த பூஞ்சுளை வருக்கை
முன்னுறக் காண்டலு முளையெயி றிலங்க
மடித்தலத் திருத்தி வகிர்ந்துவள் ளுகிரால்
தொடுத்தபொற் சுளைபல வெடுத்துவாய் மடுப்பது
10
மானிட மடங்க றூணிடைத் தோன்றி
ஆடகப் பெயரி னவுணன்மார் பிடந்து

    என்பையும் ஆகத்தையும் நகுதலையையும் ஒட்டையும் அணிந்த; ஆகமென்றது முழு என்பாகிய கங்காளத்தை; ஓடு - ஆமையோடு. தலைவி - உமாதேவியார். பொன் என்றதும் அத்தேவியாரையே. அம்பிகையின் கரிய திருவிழியின் நிறத்தால் சிவபெருமான் திருமேனி கரிய நிறத்தையும், சிவபெருமானது திருவிழியின் செந்நிறத்தால் உமாதேவியாரின் திருமேனி செந்நிறத்தையும் அடைந்தமையின் மயக்கமுண்டாயிற்றென்றார். இருவரும் ஒருவரை யொருவர் நோக்கி இன்புறுவதைக் குறிப்பித்தவாறு.

    312. (1-14) பலாப்பழத்தைக் கீண்டு சுளையை உண்ணும் மந்தி நரசிங்க மூர்த்தியைப் போலத் தோற்றுமென்பார். செங்கதிர்க்கடவுள் - சூரியன்; கடவுளத் வெயில். பிழம்பு - திரட்சி. பொதும்பு - மரச்செறிவு; “வெயினுழை பறியாக் குயினுழை பொதும்பர்” (பெரும்பாண். 374, மணி. 4 : 5); “வெயில்கண் போழாப் பயில்பூம் பொதும்பு” (பெருங். 1.33 : 27.) காவலர் - பலாப்பழத்தைக் காப்பவர்கள் (குறுந். 342 : 1-3, 385 : 1-2.) பாதபம் - மரம். இருவேறுரு - மனித இயல்பும் விங்களின் இயல்பும் ஒருங்கு அமைந்த உருவம். மந்தி - பெண் குரங்கு. வருக்கை - பலாப்பழம். முளை எயிறு - நாணல் முளையைப் போன்ற கூரிய பல். வகிர்து - பிளந்து. மானிட மடங்கல் - நரசிங்கம்.ஆடகப் பெயரின் அவுணன் - இரணியன்; ஆடகம் - பொன். (பி-ம்.)'நீடுபைங்'. பலாப்பழத்துக்கு இரணியனும், அதனுள்ளிருக்கும் சக்கைக்குக் குடரும், சுளைக்கு நிணமும், குரங்குக்கு நரசிங்க