| நீடுபைங் குடரி னிணங்கவர்ந் துண்டென | | இறும்பூது பயக்கு நறும்பணை மருதத் | | தந்த ணாரூ ரெந்தையெம் பெரும | 15. | சிங்கஞ் சுமந்த செழுமணித் தவிசிற் | | கங்குலும் பகலுங் கலந்தினி திருந்தாங் | | கிடம்வலம் பொலிந்த விறைவியு நீயும் | | நடுவண் வைகு நாகிளங் குழவியை | | ஒருவரி னொருவி ருள்ளநெக் குருக | 20. | இருவிருந் தனித்தனி யேந்தினிர் தழீஇ | | முச்சுடர் குளிர்ப்ப முறைமுறை நோக்கி | | உச்சி மோந்தும்ப் பச்சிளங் குழவி | | நாறுசெங் குமுத்த் தேறலோ டொழுகும் | | எழுதாக் கிளவியி னேழிசை பழுத்த | 25. | இழுமென் குரல மழலைத் தீஞ்சொற் | | சுவையமு துண்ணுஞ் செவிகளுக் கையவென் | | பொருளில் புன்மொழி போக்கி | | அருள்பெற வமைந்ததோ ரற்புத முடைத்தே. |
நேரிசை வெண்பா 313. | தேங்குபுக ழாரூர்த் தியாகர்க்கெண் டிக்குமொளி | | வீங்கு பகற்போது வெண்படமாம் - தூங்கிருள்சூழ் |
மூர்த்தியும் உவமைகள். உண்டென - உண்டது போல. இறும்பூது - வியப்பு. பணை - வயல்.
(15-28) உமாதேவியாருக்கு இரவும் சிவபெருமானுக்குப் பகலும் உவமைகள்; “ஏல வார்குழ லிறைவிக்கு மெம்பிரான் றனக்கும், பாலனாகிய குமரவே ண்டுவுறும் பான்மை, ஞாள மேலுறு மிரவொடு பகலுக்கு நடுவாய், மாலை யானதொன் றழிவின்றி வைகுமா றொக்கும்” (கந்த. சரவணப், 26.) நாகிளங் குழவியென்றது முருக்க் கடவுளை. ஒருவரின் - ஒருவரை்க் காட்டிலும். இறைவன் திருவிழிகள் மூன்றும் முச்சுடராதலின் ‘முச்சுடர் குளிர்ப்ப நோக்கி’ என்றார். செங்குமுத்ததேறல் - வாய் நீர். எழுதாக் கிளவியின் - வேகத்தைப் போல. சிவபெருமானும் உமாதேவியாரும் முருக்க் கடவுளைப் பாராட்டல் : 205, 449. போக்கி - செலுத்தி. அருள் பெறும்படி அமைந்த நிலை அற்புதமுடைத்து என்க. இச்செய்யுளின் பிற்பகுதியின் சொல்லும் பொருளும் 600-ஆம் செய்யுளிற் சுரிதகத்திலும் அமைந்துள்ளன.
313. சிவபெருமானுக்குத் திசைகளே ஆடையாதலின் அத்திசைகள் பகலில் வெண்ணிறமடைந்து வெள்ளாடையாகவும். இரவிற் கருநிற
|