பக்கம் எண் :

திருவாடுரூர் நான்மணி மாலை225

கங்குற் பொழுது கரும்படமாஞ் செம்படமாம்
பொங்குற்ற புன்மாலைப் போது.    
(6)

கட்டளைக் கலித்துறை
314.
போதொன் றியதண் பொழிற்கம லேசர்பொன் மார்போலெந்தாய்
சூதொன்று கொங்கைச் சுவடென்ப ராற்றொல் களிற்றுரிவை
மீதொன் றுவகண்டு வெங்கோப மாமுகள் வெண்மருப்பால்
ஈதொன் றடுகளி றென்றெதிர் பாய்ந்த விணைச்சுவடே.    
(7)

அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்
315.
இணங்குகம லாலயமா லிதயத்திற் பொலிந்ததியா
   கேச ரம்பொற்
கணங்குழைமண் மகளிதய கமலத்தும் பொலிதலினைக்
   கமல மான

மடைந்து கரிய ஆடையாகவும், அந்திப்பொழுதில் செந்நிறமடைந்து செவ்வாடையாகவும் அமைகின்றன. வெண்படம் - வெள்ளாடை; படம் - ஆடை. புன் மாலை - செக்கர் நிறத்தையுடைய மாலை; புன்மை - சிவப்பு (பட். 90, ந.); புன்மாலை - ஒளியிழந்த மாலையெனலுமாம்.

    314. சிவபெருமானு மேலுள்ள யானைத்தோலைக் கண்டு அப்பெருமானை ஒரு யானையென்றெண்ணி விநாயகர் பாய, அவருடைய கொம்பிரண்டும் பட்டதனால் உண்டான சுவடுகள் இரண்டையும் உமாதேவியாருடைய கொங்கையினால் உண்டான சுவடுகளென்பர். இது தற்குறிப்பேற்ற அணி.

    கமலேசரது மார்பில். எம் தாய் - உமாதேவியாரது. சூது - சூதாடுதற்கு அமைந்த காய்; ஆகுபெயர். உரிவை - தோல். ஒன்றுவ - பொருந்துதலை. வெவ்விய கோபத்தையுடைய மாவென்றது யானையை; மா - விலங்கு; மாமுகன் - விநாயக்க் கடவுள். இணைஞ் சுவடு - இரட்டைச் சுவடுகள். இச்செய்யுளிலமைந்த கருத்தை வேறொரு வகையாக இந்நூலாசிரியரே 546-ஆம் செய்யுளில் அமைத்துள்ளார்.

    315. தியாகேசர் திருமாலின் இதயத்தும் அவர் தேவியாராகிய மண் மகளின் இதயமாகிய திருவாரூரிலும் விளங்குதலின் அவ்விருவர் உள்ளமும் ஒத்த தன்மையனவாம்.

    கமலம் ஆலயம் மால் - நீரை இருப்பிடமாக்க் கொண்ட திருமால்; நீரெனடறது கடலை. அம்பொற் கணங்குழை மண்மகள் - அழகிய பொன்னாலாகிய திரண்ட குழையென்னும் காதணியையுடைய பூதேவி. அழகிய பொன்னின் தொகுதியையும் தளிர்களையும் தன்பால் உடைய பூமிதேவி; குழை, இங்கே மரஞ்செடி கொடிகளுக்கு ஆகுபெயராய் நின்றதாக்க் கொண்டு, தன் அகத்தே பொற்புதையல்களையும் புறத்தே தாவரங்களை