பக்கம் எண் :

226குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

மணங்கமழ்பங் கயத்தடஞ்சூழ் கமலைகம
   லாலயப்பேர்வாய்த்த தான்மற்
றணங்கனையா ரிதயமுந்தம் மருட்கொழுந
   ரிதயமுமொன் றாகுந் தானே.    
(8)

நேரிசை யசிரியப்பா
316.
தானமால் களிறு மாநிதிக் குவையும்
ஏனைய பிறவு மீகுந ரீக
நலம்பா டின்றி நாண்டுறந் தொரீஇ
இலம்பா டலைப்ப வேற்குந ரேற்க
5
புரவலர் புரத்தலு மிரவல ரிரத்தலும்
இரவே றியற்கையு மிவ்வுல குடைத்தே
    அதா அன்று
ஒருகா லத்தி லுருவமற் றொன்றே
இடப்பான் முப்பத் திரண்டறம் வளர்ப்ப
வலப்பா லிரத்தன் மாநிலத் தின்றே

யும் உடையவளென்று கொள்க. மண்மகளிதய கமலமென்றது திருவாரூரை (327); “மோதினிக், காதன் மங்கை யிதய கமலமா, மாதொர் பாகனா ராரூர் மலர்ந்ததால்” (பெரிய. திருமலைச். 33.) (பி-ம்.) ‘கமலத்திற்’. அக்கமலம் மான - அந்த இதய கமலத்தை ஒப்ப. கமலாலய மென்னும் பெயர் திருவாரூருக்கு வந்ததன் இயல்பான காரணம் திருமகள் இங்கே தங்கித் தவம் புரிந்ததாகும்; கமலா - திருமகள். இங்கே அதற்கு வேறொரு காரணம் கற்பித்தார். கற்புடை மகளிர் உள்ளக் கருத்தும் கணவர் உள்ளக் கருத்தும் ஒன்றாயிருத்தல் இயல்பாதலின் திருமாலும் பூமிதேவியும் தம் இதயத்தில் தியாகப்பெருமானை வைத்துள்ளாரென்றார். தான், ஏ : அசைநிலைகள்.

    316. அர்த்தநாரீசுவர வடிவத்தைக் குறித்த செய்யுள் இது. உலகத்தில் ஈகையாளரும் இரவலரும் தனித்தனியே இருப்பர்; இவ்வுருவத்தில் ஒருபால் ஈதலும் மற்றொருபால் இரத்தலும் அமைந்தமை வியப்பாகும்.

    (1-6) தானமால் களிறு - மதத்தையுடைய பெரிய நானை. கஜாந்த ஐசுவரியம் எனச் செல்வத்திற்கு யானையித் தலைவரம் பாக்குதலின் அதனை முதலிற் கூறினர். நலம்பாடு - நன்மை உண்டாதல். ஒரீஇ - நீக்கி. இலம்பாடு அலைப்ப - வறுமை வருத்த. (பி-ம்.) ‘இலம்பாடின்றி’. ஏற்குநர் - இரப்போர். புரவலர் - ஈகையுடையோர். புரத்தல் - தம்பால் இரந்தாருக்கு ஈந்து பாதுகாத்தல். அதாஅன்று - அங்ஙனம் அல்லாமல்.

    (7-9) உருவம் ஒன்றே ஒரே காலத்தில் அறம் வளர்ப்பதும் இரத்தலும் இன்று. மற்று: அசைநிலை. இடப்பால் - அம்பிகையின் பாகம். வலப்