பக்கம் எண் :

30குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

குன்றங் குலைய வுகைத்தேறும்
   குலிசத் தடக்கைப் புத்தேளே.    
(6)


(வேறு)
9.
வெஞ்சூட்டு நெட்டுடல் விரிக்கும் படப்பாயல்
   மீமிசைத் துஞ்சுநீல
மேகத்தி னாகத்து விடுசுடர்ப் படலைமணி
   மென்பர லுறுத்தநொந்து
பஞ்சூட்டு சீறடி பதைத்துமதன் வெங்கதிர்
   படுமிள வெயிற்குடைந்தும்
பைந்துழாய்க் காடுவிரி தண்ணிழ லொதுங்குமொர்
   பசுங்கொடியை யஞ்சலிப்பாம்
மஞ்சூட் டகட்டுநெடு வான்முகடு துருவுமொரு
   மறையோதி மஞ்சலிக்க
மறிதிரைச் சிறைவிரியு மாயிர முகக்கடவுண்
   மந்தா கினிப்பெயர்த்த

இந்திரன் உகைத்தேறுவதனால் தமக்கு இன்னும் என்ன துன்பம் நேருமோவெனக் குன்றம் குலைந்தன.

    9. (அடி 1) படப்பாயல் - ஆதிசேடனாகிய படுக்கை. நீலமேகம் - திருமால். ஆகத்து - மார்பில். சுடர்ப்படலை - ஒளியின் தொகுதி; படலை - தொகுதி (26) மணியாகிய மெல்லிய பரல்; மணி - கௌஸ்துபம்; பரல் - பருக்கைக்கல்.

    (2) பஞ்சு - செம்பஞ்சுக் குழம்பு. அதன் - அந்த மணியின். (பி-ம்.) ‘கதிர்ப்படும்’. பைந்துழாய்க் காடு - திருமால் திருமார்பிலுள்ள துளவ மாலையின் மிகுதி; “தண்டுழாய்க்காடு” (3) என்றார் முன்னும். பசுங்கொடி - திருமகள்.

    (3) மஞ்சு ஊட்டு அகடு நெடு வான்முகடு - மேகங்களைச் செறித்த உள்ளிடத்தையுடைய நீண்ட வானத்தின் உச்சியை துருவும் - ஆராயும். ஒருமறை யோதிம்மென்றது அன்னப் பறவையின் உருவெடுத்த பிரமதேவனை, மறிதிரை-கீழ் மேலாகின்ற கங்கையை, கங்கை ஆயிரமுக முடையதென்பது, “நிலை தளரா வாயிரமா முகத்தினோடும், பாய்ந்தொருத்தி படர்சடை மேற் படரக் கண்டும்” (தே. திருநா.), “கங்கை, துறைகொளாயிர முகமுஞ் சுழல” (கல்.) என்பவற்றாலும் உணரப்படும். பெயர்த்த - பெயரையுடைய.