| இன்னருள் பழுத்த சந்நிதி சேர்ந்துழி | | இருவேம் பெற்றது மொருபே றாகலின் | 30 | வேற்றுமை யுளதோ வில்லை | | ஆற்றசால் சிறப்பி னனையரோ டெனக்கே. |
நேரிசை வெண்பா 455. | ஓட்டுவிக்கக் கூட்டினைவிட் டோடும் பொறியரவைந் | | தாட்டுவிக்குஞ் சித்தர்நீ ரானக்காற் - கூட்டமிட்டு | | மன்றாடு மும்மையொரு மாசுணநின் றாட்டுவிக்க | | நின்றாடு கின்றதென்கொ னீர். |
கட்டளைக் கலித்துறை 456. | நீருண்ட புண்டரி கத்துணைத் தாணிழற் கீழ்ப்பொலியும் | | சீருண் டடித்தொண்டு செய்யா வெனக்குஞ்சிற் றம்பலத்தெம் | | காருண்ட கண்டனைக் கண்டன னாலக் கடலமுதம் | | ஆருண் டனர்மற் றவரெவ ரேனு மமரர்களே. |
“மாயனன் மாமணி கண்டன் வளர்சடை யாற்கடிமை, யாயின தொண்டர் துறக்கம் பெறுவது சொல்லுடைத்தே, காய்சின வானை வளருங் கனக மலையருகே, போயின காக்கையு மன்றே படைத்தது பொன்வண்ணமே” (பொன்வண்ணத். 100); “மாலிமயப், பொருப்பகஞ் சேர்ந்தபொல் லாக்குருங் காக்கையும் பொன்னிறமாம, யிருக்கும்” (யா. கா. அவையடக்கம், 3).
(29-31) இருவேம் - தவப்பெருந்தொண்டரும் அடியேனும், தவப்பெருந் தொண்டர் பன்னாள் முயன்று தவஞ் செய்தமைக்கும், யான் சிறிதும் முயலாது தரிசனமாத்திரம் செய்தமைக்கும் பயனில் வாசியில்லை யென்றவாறு.
455. ஓட்டுவிக்க - மனத்தைப் பல வழிகளில் ஓடச்செய்ய. கூடு - தேகம். பொறியரவு - இந்திரியங்களாகிய பாம்புகள் (சீவக. 375,) புள்ளிகளையுடைய பாம்பு; சிலேடை. மன்றில் ஆடும் ஒரு மாசுணமென்றது பதஞ்சலியை. அவர் பொருட்டுச் சிவபெருமான் நடனம் புரிந்தருளினரென்பது தல வரலாறாதலின், ‘ஒரு மாசுண நின்றாட்டுவிக்க’ என்றார் (470); “பதஞ்சலிக் கருளிய பரம நாடக” (திருவா.) பொறியரவு: 468. ஐந்து பாம்புகளை ஆட்டுவிக்கவல்ல சித்தராகிய நீர் ஒரு பாம்பு நின்று ஆட்டுவிக்க ஆடுவது என்ன வியப்பென்றபடி. பாம்பாட்டு சித்தரெனச் சித்தர்களில் ஒருவகையார் உண்டு.
456. நீருண்டவென்றது புண்டரிகத்துக்கு அடை. புண்டரிகம் - இங்கே, செந்தாமரை; தக்க. 22, உரையைப் பார்க்க. தாணிழற்கீழ்ப் பொலியும் சீராவது வீடுபெறுதல், திருத்தாளே வீடாதலின் (முருகு. 62-3, ந) எனக்கும் சீருண்டு; உம்மை இழிவு சிறப்பு. அக்கடலமுதம்: அகரம் பண்டறி சுட்டு; உலகறிசுட்டுமாம். அமுத்ததை ஆருண்டாலும் அவர்கள் இறவாமை நீங்கி அமரராதல்போல இறைவன் தரிசனத்தை யார் பெறினும் அவர் வீடு பெறுவரென்றவாறு.
|