| முடபுறம் பொதிந்த நெட்டிலைக் கைதை | | சுரிமுகப் பணோலமொடு சூலுளைந் துமிழ்ந்த | | தரளம் வெண்மடற் றாங்குவ தம்ம | | கருங்கழிக் கரையில் வெண்பொடி பூசி | 15 | இருந்தவ முஞற்றியு மியாம்பெறற் கரிய | | செஞ்சடைக் கிடந்த வெண்மதிக் கடவுள் | | வருகவென் றழைத்துப்பெருநயப் பெய்திக் | | கண்ணீர் வாரக் கலந்துடன் றழீஇ | | உண்ணென வெண்சோ றேந்தித் தண்ணென | 20 | உடுக்கணத் தொடுமவ் வுடுபதிக் கடவுளை | | மடற்றலைத் தாங்கி வைகுவது கடுக்கும் | | நெய்தலொடு தழீஇய மருத வேலித் | | தெய்வப் புலியூர் வைதிகக் கூத்த | | பொன்னிறப் புறவுங் கருநிறக் காக்கையும் | 25 | மன்னுமா லிமய வரைப்புறஞ் சேர்ந்துழி | | இருதிறப் பறவைக்கு மொருநிற னல்லதை | | நிறம்வேறு தெரிப்ப துண்டோ விறைவநின் |
(11-12) தாழையின் வருணனை.
(11-3) கைதை - தாழை. சுரிமுப்பணிலம் - சுழிந்த முகத்தையுடைய சங்கு. சூல் உளைந்து உமிழ்ந்த - அச் சங்கு கருப்பம் முதிர்ந்து ஈன்ற. சங்கையும் முத்தையும் ஒருங்கே தாங்குதல்.
(14-6) வெண்பொடி - தாழம்பூவிலுள்ள தாது; திருநீறென்பது வேறு பொருள். யாம் பெறுதற்கரிய செஞ்சடையென்றது தாழை மலரின் உட்கோள்; என்றது சிவபிரான் அம்மலரை அணியாமையைக் குறித்தது. வெண்மதிக் கடவுள்: விளி.
(17-8) நயப்பு - விருப்பம். கண்ணீர் வார - தேனாகிய நீர் ஒழுக; கண்ணிலிருந்து அன்பினால் நீர்பெருகவென்பது வேறொரு பொருள்; கண்ணீர்: சிலேடை.
(19) வெண்சோறென்றது தாழம்பூவிலுள்ள ஒருவகைப் பொருளை; வழக்கு; ‘வெள்ளிய அன்னமென்பது வேறு பொருள்; “கூன் கைதை, சோறு கால்வன” (திருவிளை. நாட்டுப் 41.)
(19-20) (பி-ம்.) ‘தண்ணெ, னுடுக்கணத்தொடும்.’ உடுக்கணம் நட்சத்திரக் கூட்டம். உடுபதிக் கடவுளை - சந்திரனாகிய தெய்வத்தை.
(12-21) சங்குக்குச் சந்திரனும் முத்துக்களுக்கு நட்சத்திரங்களும் உவமைகள்.
(24-7) மேருவைச் சேர்ந்த பொன்னிறமுள்ள புறவும் கருநிறக் காக்கையும்பொன்னிறத்தையே அடையும்; |