பக்கம் எண் :

மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்37

பாராட்டு பாண்டிப் பெருந்தேவி திருமுலைப்
  பாலமுத மூட்டியொருநின்
பானாறு குமுதங் கனிந்தூறு தேறறன்
  பட்டாடை மடிநனைப்பச்

சீராட்டி வைத்துமுத் தாடும் பசுங்கிள்ளை
  செங்கீரை யாடியருளே
தென்னற்கு மம்பொன்மலை மன்னற்கு மொருசெல்வி
  செங்கீரை யாடியருளே.    
(1)

15.
உண்ணிலா வுவகைப் பெருங்களி துளும்பநின்
  றுன்றிருத் தாதைநின்னை
ஒருமுறை கரம்பொத்தி வருகென வழைத்திடுமுன்
  ஓடித் தவழ்ந்துசென்று

தண்ணுலா மழலைப் பசுங்குதலை யமுதினிய
  தாய்வயிறு குளிரவூட்டித்
தடமார்ப நிறைகுங் குமச்சே றளைந்துபொற்
  றாடோய் தடக்கைபற்றிப்

    (3) பெருந்தேவி: அரசன் தேவியருள் உடன்முடி கவித்தல் முதலிய சிறப்புக்குரியவள் (பெருங். 2.4: 21-4.) (பி-ம்) ‘தடமுலை’. குமுதமென்றது திருவாயை. தேறல் என்றது வாய்நீரை (37, 401); “செவ்வாய்க் குதலை மெய்பெறா மழலை, சிந்துபு சின்னீ ரைம்படை நனைப்ப” (மணிமே. 3:137-8.)

    (4) முத்தாடுதல் - முத்தமிடுதல். கிள்ளை: விளி. பொன்மலை மன்னம் - இமய மன்னன். செல்வி - மகள். செங்கீரையாடியருள் - செவ்விய சொற்களைச் சொல்லியருள்; செங்கீரையாடுதல் ஒரு நிர்த்த விசேடமென்பர் பெரியவாச்சான் பிள்ளை.

    (முடிபு.) பெருந்தேவி நீராட்டித் திமிர்ந்து சாத்தி முடித்துத் திருத்தி இட்டு ஊட்டி நனைப்பச் சீராட்டி முத்தாடும் கிள்ளை, ஆடியருள்.

    15. (அடி, 1) துளும்ப - ததும்ப. தாதை - மலயத்துவச பாண்டியன். கரம் பொத்தி - கைகொட்டி.

    (2) தண் - தண்மை. குதலையாகிய அமுது: குதலை - எழுத்து வடிவம் பெறாத சொல். தாய் - காஞ்சனமாலை. தாள் தோய் தடக்கை - முழந்தாளைத் தோய்ந்த பெரிய கை.