பக்கம் எண் :

36குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

பண்ணுலாம் வடிதமிழ்ப் பைந்தாமம் விரியும்
   பணைத்தோ ளெருத்தமேறிப்
பாசொளிய மரகதத்் திருமேனிப் பச்சைப்
   பசுங்கதிர் ததும்பமணிவாய்த்

தெண்ணிலா விரியநின் றாடும் பசுந்தோகை
   செங்கீரை யாடியருளே
தென்னற்கு மம்பொன்மலை மன்னற்கு மொருசெல்வி
   செங்கீரை யாடியருளே.        
(2)

16.
சுற்றுநெடு நேமிச் சுவர்க்கிசைய வெட்டுச்
   சுவர்க்கா னிறுத்திமேருத்
தூணொன்று நடுநட்டு வெளிமுகடு மூடியிரு
   சுடர்விளக் கிட்டுமுற்ற

எற்றுபுன லிற்கழுவு புவனப் பழங்கலம்
   எடுத்தடுக் கிப்புதுக்கூழ்
இன்னமுத முஞ்சமைத் தன்னைநீ பன்முறை
   இழைத்திட வழித்தழித்தோர்

முற்றவெளி யிற்றிரியு மத்தப் பெரும்பித்தன்
   முன்னின்று தொந்தமிடவும்
முனியாது வைகலு மெடுத்தடுக் கிப்பெரிய
   மூதண்ட கூடமூடும்

    (3) தமிழ்ப்பைந்தாமம் - தமிழ்ப்பாமாலை. தோள் எருத்தம் - தோளைச் சார்ந்த பிடரி. மரகத்த் திருமேனி, அம்பிகையினது. மணி - பவளம்.

    (4) தோகை: விளி.

    16. (அடி, 1) நேமிச்சுவர் - சக்கரவாளகிரியாகிய சுவர். எட்டுச் சுவர்க்கால் - குலாசலங்கள் எட்டு; “வெற்பெட்டும்” (34.) சுவரைச் சார்த்தியமைத்த கால்களின்மேல் மேற்பரப்பின் பாரம் தங்கும்படி அமைத்தலும் இடையிலே ஒரு தூண் நடுதலும் ஒருவகைச் சிற்பம். வெளிமுகடு - ஆகாயத்தின் உச்சி. இரு சுடர் - சூரிய சந்திரர். முற்ற - முழுவதும்.

    (2) புனல் - கடல். புனலிற் கழுவுதலென்றது பிரளயகால வெள்ளத்தில் உலகு அமிழ்தலைக் குறித்தது. புதுக்கூழ் - புதுக்கிய ஊழ், புதிய கூழ்; சிலேடை (71.) இழைத்திட - செய்ய.

    (3) வெளியில் முற்ற - வெளியில் முழுதும். தொந்தமிடல் - கூத்தாடல் (30.) வைகலும் - நாள்தோறும். முதிய அண்ட கடாகத்தால் மூடும்.