| சிற்றில்விளை யாடுமொரு பச்சிளம் பெண்பிள்ளை | | செங்கீரை யாடியருளே | | தென்னற்கு மம்பொன்மலை மன்னற்கு மொருசெல்வி | | |
17. | மங்குல்படு கந்தரச் சுந்தரக் கடவுட்கு | | மழகதிர்க் கற்றைசுற்றும் | | வாணயன மூன்றுங் குளிர்ந்தமுத கலைதலை | | மடுப்பக் கடைக்கணோக்கும் |
| பொங்குமதர் நோக்கிற் பிறந்தவா னந்தப் | | புதுப்புணரி நீத்தமையன் | | புந்தித் தடத்தினை நிரப்பவழி யடியர்பாற் | | போகசா கரமடுப்ப |
| அங்கணொடு ஞாலத்து வித்தின்றி வித்திய | | வனைத்துயிர் களுந்தளிர்ப்ப | | அருண்மடை திறந்தகடை வெள்ளம் பெருக்கெடுத் | | தலையெறிந் களவுகளும் |
| செங்கயல் கிடக்குங் கருங்கட் பசுந்தோகை | | செங்கீரை யாடியருளே | | தென்னற்கு மம்பொன்மலை மன்னற்கு மொருசெல்வி | | |
(4) சிற்றிலென்றது அண்டங்களை. பச்சிளமை - மிக்க இளமை. பெண்பிள்ளை: விளி; வழக்கு.
அம்பிகை உலகத்தை அடிக்கடியாக்குதலும் அவற்றைச் சிவபெருமான் அழித்தலுமாகிய செய்கைகளைச் சிறுமியர் சிற்றிலிழைத்தலும் சிறுவர் அதனை யழித்தலுமாகிய செயல்களாய உருவகித்துக கூறினார்.
17, (அடி. 1) மங்குல் படு - கருமேகத்தையொத்த. சுந்தரம் - கழுத்து. கந்தரச் சுந்தரக் கடவுள்: 107. மழகதிர்க் கற்றை: 2.
(1-2) கடைக்கண்ணால் நோக்கும் நோக்கில், பொங்கும் நோக்கிலென்க; நோக்கு - பார்வை. நிரப்புதலால் அடியார்கள் பால் போக சாகரம் மடுப்ப; அடியர் - இங்கே ஆன்மாக்கள். சிவபெருமான் போகியாக நிற்றலின் உயிர்களும் போகத்தை அடையுமென்பது கருத்து.
(3) (பி-ம்.) ‘மடைதிறந்து’. அருள்மடை ...................கயல்: “கருணையின் முழுகிய கயறிரி பசிய கரும்பே” 922.)
(4) (பி-ம்.) ‘செங்கயல் கடக்கும்’. தோகை: விளி.
|