18. | பண்ணறா வரிமிடற் றறுகான் மடுப்பப் | | பசுந்தேற லாறலைக்கும் | | பதும்பீ டிகையுமுது பழமறை விரிந்தொளி | | பழுத்தசெந் நாவுமிமையாக் | | கண்ணறா மரகதப் கற்றைக் கலாமஞ்ஞை | | கணமுகி றதும்பவேங்கும் | | கார்வரையும் வெள்ளெனவொர் கன்னிமா டத்துவளர் | | கர்ப்பூர வல்லிகதிர்கால் | | விண்ணறா மதிமுயற் கலைகிழிந் திழியமுத | | வெள்ளருவி பாயவெடிபோய் | | மீளுந் தகட்டகட் டிளவாளை மோதமுகை | | விண்டொழுகு முண்டகப்பூந் | | தெண்ணறா வருவிபாய் மதுரைமர கதவல்லி | | செங்கீரை யாடியருளே | | தென்னற்கு மம்பொன்மலை மன்னற்கு மொருசெல்வி | | |
வேறு 19. | முகமதி யூடெழு நகைநில வாட | | முடிச்சூ ழியமாட | | முரிபுரு வாக்கொடி நுதலிடு சுட்டி | | முரிப்பொ டசைந்தாட |
18. (அடி, 1) பண் - இசை. வரி - ஒருவகைப் பாட்டு. அறுகால் - வண்டு. பதும பீடிகை - திருமகள் வாழும் செந்தாமரைமலராகிய ஆசனம். முது பழமறை - மிக பழைய வேதம். செந்நா - கலைமகள் வீற்றிருக்கும் பிரமனது நா.
(1-2) இளமையாக் கண்ணென்றது மயிலின் தோகையிலுள்ள கண்களை. கலாமஞ்ஞை: 6, ததும்ப - ஒலிக்க. கார்வரை - இங்கே விந்தமலை. வெள்ளென - நாணத்தால் வெண்ணிறமடைய, அங்கயற்கணம்மை கன்னி மாடத்தில் வளர்வது நோக்கி, ‘இம்மாடம் பெற்ற பேறுயாம் பெற்றிலேமே’ எனத் திருமகளைத் தாங்கும் தாமரையும், கலைமகளைத் தாங்கும் பிரமன் நாவும், துர்க்கையைத் தாங்கும் விந்தமலையும் நாணமடைந்தனவென்பது கருத்து. (3) முயலையுடைய மதிக்கலை யென்று மாறிப் பொருள் கொள்க. பாய - பாயும்படி. வெடிபோய் - துள்ளி. தகடு அகடு - வெள்ளித் தகடு போன்ற வயிறு. வாளை பாய்வதனால் மதியின் கலை கிழிந்து அமுதம் பாய்ந்தது.
(4) நறாவருவி - தேனருவி.
19, (அடி, 1) முடிச் சூழியம் - உச்சிக்கொண்டை. முரி - வளைந்த. புருவமாகிய கொடி. முரிப்பு - வளைவு.
|