இது முதலடியும் ஈற்றடியும் அளவடியாய்க் குறளடியும் சிந்தடியும் இடையிட்டுத் தொடுத்தமையால் இணைக்குறளாசிரியம். இவ்வகவலுள் புண்ணியப் பொதுவி லாடுத் பூங்கழலிறைஞ்சுதும் என நெடிலடியும் அருகி வந்தவாறு காண்க. குறளடிமுதல் நான்கும் இதனுள்ளே வந்தன; ஏனைக்கணி நெடிலடி ஆசிரிய விருத்தத்துட் காண்க.
524. | மாயிரு விசும்பிற் றூநிலாப் பரப்பிப் |
| பாயிருள் சீக்கும் பனிமதிக் கண்ணியும் |
| மின்செய் கொண்மூ வெள்ளிவீழ் வீழ்ப்பப் |
| பொன்செய்மலர்ப் பூங்கொன்றையும் |
5 | புலியூர் மன்றி னொலிகழன் மிழற்றப் |
| பரம நாடக மிருவரைக் காட்டும் |
| எரிநிறத் தைம்முகத் தெண்டோன் முக்கட் |
| கருமிடற் றொருவநின் செஞ்சடைப் பொலிதலின் |
523. கடுக்கை - கொன்றை. கள் நீர் - தேனாகிய நீர். வெண் மதியாகிய பிறிதொரு கண்ணியைச் சூடுதலினால் கொன்றை கண்ணீர் சொரிந்து வருந்தவென்று வேறொரு பொருள் தோற்றியது. “கண்ணி கார்நறுங்கொன்றை” (புறநா. 1) என்பதனாலும் கொன்றையைக் கண்ணியாகச் சூடுதல் பெறப்படும். மதிக் கண்ணி: 524. பொது - அம்பலம். விண்மிசைப் போகிய வீடு - சுவர்க்க பதவிக்கு மேலேயுள்ள முத்தி; “வானோர்க் குயர்த வுலகம்” (குறள், 346) என்பர் திருவள்ளுவர்.
524. (அடி, 1-4) பாயிருள் சீக்கும் - பரவிய இருளைப் போக்கும்; கொண்மூ வெள்ளி வீழ்ப்ப - மேகம் வெள்ளிவிழுதை வீழ்த்துவது போல மழை பெய்ய; “வெள்ளி வீழிடை வீழ்த்தெனத்தாரைகள் .... வள்ளி யோரின் வழங்கின மேகமே” (கம்ப. ஆற்றுப். 4); “வெள்ளிவீழ் வீழ்வன கடுப்ப” (நைடத. அன்னத்தைத்.) பொன் செய் மலர் - பொன் போன்ற மலரையுடைய; செய்: உவமவுருபு. கொன்றை கார் காலத்தில் மலர்வது: “கார் நறுங்கொன்றை” (புறநா. 1:1.)
(6-7) பரமநாடகம் - பரமானந்த தாண்டவம்; “பதஞ்சலிக் கருளிய பரம நாடக” (திருவா.) இருவர் - பதஞ்சலி, வியாக்கிர பாதர். எண்டோள் முக்கண்: 503.