| இமையா வறுங்கண் ணிமைத்தபைங் கூந்தற் | 10 | பசுந்தார் மஞ்ஞை யசைந்தமர் தோற்றம் | | பொற்றுணர் பொதுளிய கற்பகப் பொதும்பர் | | பொறிவண் டுண்ணா நறுமலர் தூற்றப் | | பாடல் சான்ற கோடுபல தாங்கிக் | | கவளங் கொள்ளாத் தவளமால் களிற்றிற் | 15 | கண்பல படைத்த கார்முகில் வண்ணத் | | திந்திரன் பொலியு மெழினலங் காட்டும் | | தண்பணை யுடுத்த தமிழ்ப்பெருங் கூடல் | | வண்பதி புரக்கு மாசி மாமணி | | தலைப்படு கலைமதி தாங்கா தாங்கத் | 20 | தலைப்படு கலைமதி தாங்கி நிலைப்படு | | மானிட னாய வடிவுகொண் டருளாது | | மானிட னாய வடிவுகொண் டருளி | | எற்பணி பூணா தெற்பணி பூண்டு | | பாரிடஞ் சூழாது பாரிடஞ் சூழ்தர | 25 | ஆரு ரமர்ந்த ஞானசம் பந்த |
கண்ணைப்போல; புலன் - பொறிநுகர்ச்சிக்கு விஷயமான பொருள். இமையா வறுங்கண் - இமைத்தல் இல்லாத பார்வையற்ற வறியபீலிக்கண். கூந்தலென்றது தோகையை. தார் - கழுத்திலுள்ள கீற்று.
(11-6) துணர் - பூங்கொத்து. பொதுளிய - செறிந்த. பொறி வண்டு - புள்ளிகளையுடைய வண்டு. கோடு - கொம்பு. தவளமால் களிறு - ஐராவதம் (பி-ம்.) ‘மாகளிற்றிற்’.
(5-16) வேங்கைமலருக்குக் கற்பக மலரும், வெண்மலர்கள் செறிந்த புன்னைக்கு ஐராவதமும், மயிலுக்கு இந்திரனும் உவமைகள்.
(17) தண்பணை - மருதநிலம். கூடல் - மதுரை.
(19-25) சிவபெருமானே தம் உருவங் கரந்து மானிடச் சட்டை சாத்தி ஞானாசிரியராக வந்தாரென்பர்.
தலைப்படு கலைமதி - சிரத்திலே பொருந்திய கலைகளை உடைய பிறை, சிறப்பையுடைய சாத்திர அறிவு. மானிடனாய வடிவு - மானை இடப்பக்கத்திலே உடையவனாகிய திருக்கோலம், மனிதனாகிய உருவம். எற்பு அணி பூணாது - என்பாகிய ஆபரணத்தை அணியாமல். எற்பணி பூண்டு - என்னைத் தொண்டு கொண்டு. பாரிடம் - பூதம், பூமி.
|